இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடய அமைப்புக்களை நிபந்தனையற்ற வகையில் தடை செய்ய வேண்டும் - ஞானசார தேரர்

 


நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட இலங்கையரை பாதுகாப்பு தரப்பு கைது செய்து விடுவித்து இரகசியமாக கண்காணித்து வந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நியூசிலாந்து - ஒக்லாந்து நகரில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் இலங்கை அதிகளவில் அவதானம் செலுத்த வேண்டும்.

மேலும் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றமையை அரசாங்கம் ஒருபோதும் கருத்தில் கொள்ள கூடாது.

 இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களையும் நிபந்தனையற்ற வகையில் தடை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அஹமட் ஆதில் மொஹமட் சம்சுதீன் என்ற பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட நபரால் கத்திக்குத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸிலாந்து புலனாய்வு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நபர் 2017ஆம் ஆண்டு நியூசிலாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு பேஸ்புக் பக்கங்கள் ஊடாக இஸ்லாம் மத தீவிரவாதத்தை வளர்ப்பற்கான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இருப்பினும் மனித உரிமை காரணிகளையும், ஏனைய பொது காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இவரை நியூசிலாந்து பாதுகாப்பு தரப்பினர் அவரை இரகசியமாக கண்காணித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments