கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நாளை மாணவர்களுக்கு Covid-19 தடுப்பூசி - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Sunday, October 24, 2021

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நாளை மாணவர்களுக்கு Covid-19 தடுப்பூசி

 


எதிர் வரும் திங்கள்கிழமை- 2021.10.25 காலை 8.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரை கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கீழே குறிப்பிட்டுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

பாடசாலைகளில் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள்
2020 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண நிலை (O / L) மற்றும் உயர்தர (A / L) தேர்வுகளை எழுதிய மாணவர்கள்.
அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தடுப்பூசி பெற தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள்
1.அல் அக்ஷா தேசிய பாடசாலை
2. நிர்மலா மாதா சிங்களக் கல்லூரி
3. ரோமன் கத்தோலிக்க கல்லூரி, கல்பிட்டி
4. குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம்
5.கந்தகுளிய சிங்களக் கல்லூரி
6. குறிஞ்சிப்பிட்டி சிங்களக் கல்லூரி
7.கந்தகுளிய முஸ்லிம் கல்லூரி
8.கண்டகுளி முனே சிங்களக் கல்லூரி
தடுப்பூசி போடும் போது,
1. அடையாள அட்டையின் புகைப்பட நகல் மற்றும் அதில் தொலைபேசி எண்ணைக் எழுதி கொண்டு வாருங்கள்
2. உங்களிடம் அடையாள அட்டை இல்லையென்றால், உங்கள் பெற்றோரின் அடையாள அட்டையின் நகலைக் கொண்டு வாருங்கள்
3. 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் தங்கள் தாய் அல்லது தந்தையுடன் வர வேண்டும்.
இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages