ஆரோக்கியமான சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்க அனுமதி - KALPITIYA VOICE - THE TRUTH

Thursday, October 7, 2021

ஆரோக்கியமான சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்க அனுமதி


இலங்கையின் தொற்று நோய்களுக்கான ஆலோசனைக்குழு, 15 முதல் 19 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்க ஒப்புதல் வழங்கி பரிந்துரை செய்துள்ளது.


இலங்கை உள்நாட்டு மருத்துவக் கல்லூரியின் தலைவராக உள்ள ஆலோசகர் மருத்துவர் ஹர்ஷ சதீச்சந்திர (Harsha Satishchandra) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி தடுப்பூசி போடும் திட்டத்தை சுகாதார அமைச்சகம் விரைவில் ஆரம்பிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி செலுத்தல், 19 முதல் 15 வரையில் இறங்கு வரிசையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த தடுப்பூசி இயக்கம் அனைத்து மருத்துவமனைகள் மற்றும், சுகாதார அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடப்பட்ட பிறகு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை அறிய தடுப்பூசி போடப்பட்ட அனைத்து சிறுவர்களும் தடுப்பூசி மையத்தில் 30 நிமிடங்கள் தங்கிச் செல்லுமாறு கேட்கப்படுவார்கள்.

இதேவேளை, தடுப்பூசி போடுவதற்கு முன்பு சிறுவர்கள் பரிசிட்டமோல் அல்லது வேறு எந்த மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர் எச்சரித்துள்ளார்.

ஆனால் தடுப்பூசிக்குப் பிறகு தலைவலி, உடல் வலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் மட்டுமே பரிசிட்டமோல் எடுக்க முடியும் என்று இலங்கை உள்நாட்டு மருத்துவக் கல்லூரியின் தலைவராக உள்ள ஆலோசகர் மருத்துவர் ஹர்ஷ சதீச்சந்திர பரிந்துரைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Pages