பென்சிலை திருடியதாக சக மாணவன் ஒருவர் மீது 1 ஆம் வகுப்பு மாணவன் பொலிஸில் முறைப்பாடு - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, November 27, 2021

பென்சிலை திருடியதாக சக மாணவன் ஒருவர் மீது 1 ஆம் வகுப்பு மாணவன் பொலிஸில் முறைப்பாடு

 


பென்சிலை திருடியதாக சக மாணவன் ஒருவர் மீது 1 ஆம் வகுப்பு மாணவன் பொலிஸில் சகா மாணவர்களோடு சென்று புகார் அளித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தகடுவூரைச் சேர்ந்த சிறுவன் ஹனுமந்த். அதே ஊரில் உள்ள பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறான். அண்மையில், அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு சில மாணவர்களுடன் வந்த ஹனுமந்த், அதில் ஒரு மாணவன் மீது தனது பென்சிலை திருடி விட்டாதாக புகார் கூறினான். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் புகார் அளித்த மாணவரை சமாதானம் செய்து உள்ளனர்.

  ஆனாலும் சமாதானம் ஆகாத அந்த சிறுவன் 'என்னுடைய பென்சிலை திருடியவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, பிடிவாதமாக பொலிஸாரிடம் கூறினான்.

அதற்கு பதிலளித்த பொலிஸார் , வழக்குப் பதிவு செய்தால் நீதிமன்றம், ஜாமின் என பென்சில் திருடிய மாணவனின் பெற்றோர் அலைய நேரிடும் என தெரிவித்தனர். இதனை அடுத்து, நான் அவனுடைய பெற்றோரிடம் இது பற்றி கூறுகிறேன் என ஹனுமந்த் தெரிவித்தான்.

சிரிப்பை அடக்க முடியாத பொலிஸார் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.    

No comments:

Post a Comment

Pages