இலங்கையில் இரண்டு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது குறைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மழை பெய்து வருவதனால் மக்கள் சுகாதாரம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலருக்கு கோவிட் தொற்றுக்கு எதிராக நாங்கள் கொடுத்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன.
இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டு 6 மாதங்களுக்குப் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைந்து வருவதாக உலகளவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் தான் பைஸர் தடுப்பூசியை மூன்றாவது தடுப்பூசியாக வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொண்டோம். அதற்கமைய அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.எதிர்வரும் நாட்களில் அந்த நடவடிக்கை விரைவுபடுத்துவோம்.
நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து டிசம்பர் மாதம் இறுதி வரை நம் நாட்டில் மழைப்பொழியும் காலமாகும். சளி, காயச்சல் அதிகரிக்கும் காலப்பகுதியாகும். ஒரு நாடாக, அடுத்த ஐந்து முதல் ஆறு வாரங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments