கோடீஸ்வரர்களாக மாற்றும் பிட்காயின்: பிட்காயின் என்றால் என்ன? எத்தனை முறை இதனை பயன்படுத்தலாம்

 


பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம்.

பிட்காயின் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் விலை சில டாலர்களே. ஆனால் தற்போது ஒரு பிட்காயினின் விலை $10000 டாலர்களை தாண்டி நிற்கிறது.

இதிலிருந்தே மக்கள் இதனை நம்புகிறார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மக்கள் இதனை வரவேற்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இதனை யாராலும் கண்காணிக்க முடியாது.

ஆகையால் இதற்கு வருமான வரி என்பது அவசியமில்லை. ஆகையால் தற்போது சில வர்த்தக நிறுவனங்கள் கூட தற்போது பிட்காயின்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டன.

உலகம் முழுக்க பிட்காயின் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யவதோடு மற்றவர்களுக்கும் அனுப்பலாம். எண்ம நாணயமான (டிஜிட்டல் கரன்சி) இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா என்பவர் தான்.

குறித்த நாணயத்தினை எந்தவொரு அரசாங்கமும் கட்டுப்படுத்த முடியாது. அதாவது நாம் புழக்கத்தில் வைத்திருக்கும் பணத்தினை ஏதாவது மத்திய அமைப்பு தான் கட்டுப்படுத்தும். ஆனால் இதனை அவ்வாறு கட்டுப்படுத்த இயலாது.

இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் மோசடி செய்ய முடியாது.

ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது. பெரும்பாலும் பிட்காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர் கூடப் பிட்காயினைப் பயன்படுத்த முடியும்.

 பிட்காயின்களை தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும்.

எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட்காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட்காயின்களை உருவாக்க முடியாது என்பதால் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.   

Post a Comment

0 Comments