இறக்குமதி பால் மா 400 கிராம் 60ரூபாவால் அதிகரிப்பு - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Thursday, December 30, 2021

இறக்குமதி பால் மா 400 கிராம் 60ரூபாவால் அதிகரிப்பு

 


இறக்குமதி பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 400 கிராம் பால் பெக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவாவலும், ஒரு கிலோ கிராம் பால் மா பெக்கெட் ஒன்றின் விலையை 150 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 400 கிராம் பால் மா பெக்கெட் 480 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் பால் மா பெக்கெட் 1,195 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பிற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் 1 கிலோ கிராம் பால் மா பெக்கெட்டின் புதிய விலை 1,345 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில், 400 கிராம் பால் மா பெக்கெட்டின் புதிய விலை 540 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages