ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதியா ? சஹ்ரானுக்கு சம்பளமும் வழங்கினாரா?

 (ஆர்.யசி)


ஜனா­தி­ப­தியே ஈஸ்டர் தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி எனவும், அவர் அதி­கா­ரத்­திற்கு வரு­வ­தற்­கா­கவே ஈஸ்டர் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது எனவும் ஒரு கருத்தை உரு­வாக்க முயற்­சிக்­கின்­றனர். இதனை நாம் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்றோம் எனக்­கூறும் பாது­காப்பு செய­லாளர் ஜெனரல் கமல் குண­ரத்ன, சஹ்­ரா­னுக்கு எமது அர­சாங்கம் சம்­பளம் கொடுத்­த­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு முற்­று­மு­ழு­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டாகும் என்றார்.

கடந்த ஈராண்டு காலத்தில் முப்­ப­டை­யி­னரின் செயற்­பா­டுகள் தொடர்பில் ஜனா­தி­பதி ஊடக மையத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட போதே பாது­காப்பு செய­லாளர் ஜெனரல் கமல் குண­ரத்ன இதனை கூறினார்.
அவர் மேலும் கூறு­கையில்,

முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் கிழக்கு மாகா­ணத்தில் அரச மொழி இல்­லாத வேறு மொழி­களில் குறிப்­பாக அரபு மொழி பயன்­பா­டு­க­ளுக்கு இடம் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. கடை­களில் அரபு மொழி பதா­தைகள் வைக்­கப்­பட்­ட­துடன், பேரீத்தம்பழ மரங்­களும் நடப்­பட்­டன. இவற்றை ஒரே­டி­யாக எம்மால் அடக்­கி­விட முடியும், இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­படும் நபர்­களும் இலங்­கை­யர்கள், அவர்­களின் உணர்­வு­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத விதத்தில் ஆனால் இவற்றை கட்­டுப்­ப­டுத்தும் வித­மாக நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். ஆக­வேதான் முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மதத்­த­லை­வர்­களை, குழுக்­களை வர­வ­ழைத்து இந்த விட­யங்கள் தொடர்பில் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து அவர்­க­ளி­டத்தில் நிலை­மை­களை தெளி­வு­ப­டுத்தி வரு­கின்றோம். இலங்­கையில் இது­வரை கால­மாக பின்­பற்­றப்படாத கலா­சா­ரத்தை இலங்­கைக்குள் உரு­வாக்கி இனங்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது.

உலகில் உள்ள பழ­மை­யான மத­மொன்றை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்தி, குறிப்­பிட்ட ஒரு இளைஞர் குழுவின் மன­நி­லையை முழு­மை­யாக குழப்­பி­யதன் விளைவே இந்த ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெற கார­ண­மாகும். இதனால் முழு நாடுமே நாச­மா­கி­யது மட்­டு­மல்­லாது நாட்டில் வாழும் சகல முஸ்­லிம்­க­ளையும் சந்­தே­கக்­கண்­ணோட்­டத்தில் பார்க்க வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­கி­யது. இதனால் முஸ்லிம் சமூ­கத்­திற்கு பாரிய அழுத்தம் ஏற்­பட்­டது. இன­மா­கவோ அல்­லது மத­மா­கவோ அவர்கள் தவ­றி­ழைக்­க­வில்லை, ஆனால் அடிப்­ப­டை­வா­தத்தின் பக்கம் அவர்கள் செல்லும் வேளையில் அதனை தடுத்து அவர்­களை சரி­யான பக்கம் அழைத்­து­வர வேண்­டிய கடமை முஸ்லிம் சமூ­கத்தின் தலை­வர்­க­ளிடம் உள்­ளது.

அதேபோல், சஹ­்ரா­னுக்கு எமது அர­சாங்கம் சம்­பளம் கொடுக்­க­வில்லை, அவ்­வாறு கூறும் குற்­றச்­சாட்டு முற்­று­மு­ழு­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டாகும். அது­மட்­டு­மல்ல, ஜனா­தி­ப­தியே ஈஸ்டர் தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி எனவும், அவர் அதி­கா­ரத்­திற்கு வரு­வ­தற்­கா­கவே ஈஸ்டர் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது எனவும் ஒரு கருத்தை உரு­வாக்க முயற்­சிக்­கின்­றனர். அர­சியல் நலன்­க­ளுக்­காக இவ்­வா­றான பொய்­யான குற்­றச்­சாட்டை அவர்கள் முன்­வைக்­கின்­றனர்.

ஆனால், இந்த விட­யத்தில் பலரை கைது செய்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து, அதில் சிலரை விடு­தலை செய்­துள்­ள­துடன் மேலும் சிலர் இரண்டு ஆண்­டு­க­ளாக இன்றும் சிறைப்­ப­டுத்­தப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அதேபோல் இந்த தாக்­கு­த­லுடன் தொடர்பில் இருந்த முக்­கிய நப­ராக மௌலவி ஒரு­வ­ரையும் கைது செய்து தடுத்து வைத்­துள்ளோம். ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்னர் ஆரம்­பிக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் எது­வுமே முறை­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை, எனினும் நாம் இந்த விசா­ர­ணை­களை முறை­யாக முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இப்­போதும் பல வழக்­குகள் தொடுக்­கப்­பட்­டுள்­ளன. எதிர்­கா­லத்­திலும் வழக்­குகள் தொடுக்­கப்­படும். அதற்­கான சாட்­சி­யங்­களை திரட்டி வரு­கின்றோம். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் நியா­யத்தை பெற்­றுக்­கொ­டுப்போம்.

மேலும்,சுரேஷ் சலே என்ற அரச புல­னாய்­வுத்­துறை அதி­காரி குறித்து அதி­க­மாக பேசப்­பட்­டது, அவர் ஒரு முஸ்லிம் நபர் என்ற கார­ணத்­தினால் அவ­ரது ஒத்­து­ழைப்­புடன் இந்த தாக்­குதல் இடம்பெற்றதாக கூறப்பட்டது. அவர் அடிப்படைவாதியோ, முஸ்லிம் நபரோ அல்ல. அவரது பெயரில் உள்ள சலே மட்டுமே இஸ்லாத்துடன் தொடர்புபட்டுள்ளது, ஆனால் அவருக்கு தமிழோ, குர்ஆன் வாசிக்கவோ தெரியாது. அவர் சிங்கள பெண்ணையே திருமணம் முடித்துள்ளார், இரண்டு பிள்ளைகள் உள்ளனர் அவர்களும் சிங்களவர்கள். அவர் விகாரையில் வழிபாடும் நபர் என்பதும் எனக்கு தெரியும். அவர் எமது நாட்டின் வளம் என்றே கூற முடியும் என்றார்.- Vidivelli

Post a Comment

0 Comments