உங்களுக்கு தெரியுமா கத்தார் Decenber 18ம் திகதியை ஏன், எதற்கு தேசிய தினமாக கொண்டாடுகின்றது!

 


கட்டார் சர்வதேச நாடுகளின் மீது அக்கறை கொண்ட நாடாகவும் கருதப்படுகிறது. அதனடிப்படையில் 2016ம் ஆண்டு சிரியா நாட்டு யுத்தம் காரணமாக துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் தேசிய தின நிகழ்வுகளை கூட கொண்டாடவில்லை. இதுவே உலகின் முதல் தடவை ஒரு நாடு இன்னொரு நாட்டிற்காக தேசிய தின நிகழ்வுகளை ரத்து செய்து துக்கம் அனுஷ்டிட்டது.

2017 ஜுன், காலப்பகுதியில் கத்தாருக்கு எதிராக சவூதி அரேபியா, துபாய், எகிப்து மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளால் கத்தார் அரசின் மீது தீவிரவாத்திற்கு ஆதரவான நாடு என குற்றம் சாட்டப்பட்டு அந்நாடுகளுடனான அரச தொடர்பு மற்றும் தரைவழி, வான்வழி போக்குவரத்து தொடர்புகளை துண்டித்தன. 

அத்தடைகளையும் தாண்டி நாட்டின் பொருளாதாரத்தில் அபிவருத்தியை மாத்திரமே ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நடந்தும் எந்தவொரு சந்தர்பத்திலும் கத்தார் தன் நாட்டு மக்களின் இறையான்மை பாதிக்கும் வகையில் நடந்திருக்கவில்லை. இதன் வழியே கட்டார் ஓர் இறையான்மையின் முகவரியாக புரிந்திருக்கின்றேன்.

நன்றி
கத்தாரிலிருந்து முர்ஸி…..

Post a Comment

0 Comments