கொழும்பு துறைமுகத்தில் சுமார் 300 அரிசி கொள்கலன்கள் தேங்கிக்கிடப்பு - நாட்டில் மக்கள் திண்டாட்டம் - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Thursday, December 30, 2021

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 300 அரிசி கொள்கலன்கள் தேங்கிக்கிடப்பு - நாட்டில் மக்கள் திண்டாட்டம்

 


கொழும்பு துறைமுகத்தில் சுமார் 300 அரிசி கொள்கலன்கள் தேங்கிக்கிடப்பதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவிவரும் டொலர் பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்கலன்களை விடுவிப்பதற்காக டொலர்களை விடுவிப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்திருந்த நிலையில்,டொலர் கிடைத்தால் மிக விரைவில் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டொலர் பிரச்சினை காரணமாக 1,000 இற்கும் அதிகமான கொள்கலன்கள் துறைகத்தில் தேங்கியுள்ளதோடு அவற்றை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கிய நிலையில் இந்த வாரம் முதல் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages