கணவரின் நீலப்பட ஆசை - மூன்றே மாதங்களில் விவாகரத்து கோரிய இளம் வயது மனைவி - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Monday, January 17, 2022

கணவரின் நீலப்பட ஆசை - மூன்றே மாதங்களில் விவாகரத்து கோரிய இளம் வயது மனைவி

 


கணவரின் விபரீத பாலியல் ஆசையால், திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண்ணொருவர் விவாகரத்து கோரிய சம்பவமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கொன்றில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம் அரச உத்தியோகத்தரான யுவதியொருவர் 3 மாதங்களின் முன் திருமணம் முடித்திருந்தார். அரச உத்தியோகத்தரான கணவர், நீலப்படங்களிற்கு அடிமையானவர் என்பதை, திருமணத்தின் பின்னரே யுவதி அறிந்துக்கொண்டுள்ளார்.

நீலப்படங்களில் இடம்பெறும் பாலியல் காட்சிகளை போல, நிஜ வாழ்விலும் செயற்பட வேண்டுமென்ற கணவரின் விபரீத முயற்சிகளையடுத்து, திருமணமான 3 மாதங்களிலேயே அந்தப் பெண் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

சில மாதங்களின் முன்னர் வவுனியா பகுதியில், கணவரின் அதீத பாலியல் நாட்டத்தால் மனைவி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages