நாமல் ராஜபக்ஷ எப்படி மன்னராக போகின்றார் பார்ப்போம்? நாங்கள் பயப்பட மாட்டோம் அமைச்சர் நய்யாண்டி - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, January 16, 2022

நாமல் ராஜபக்ஷ எப்படி மன்னராக போகின்றார் பார்ப்போம்? நாங்கள் பயப்பட மாட்டோம் அமைச்சர் நய்யாண்டி

 


அமைச்சர் நாமல் ராஜபக்ச தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) கவனிப்பது எந்த விதத்தில் என்றால், அவரது எதிர்கால அரசியல் இலக்கு சம்பந்தமான விடயத்தில் அது ஆபத்தாக மாறக் கூடும் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர (DayaSri Jayasekara) தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட மாநாட்டில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி மைத்திரிபால சிறிசேனவை சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர்.

கட்சியின் மீது தாக்குதல் தொடுக்க வேண்டுமாயின் கட்சியின் தலைவரை தாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கும் முன்னரும் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை வழங்கும் போதும், நாம் எப்படி இவர்களை கட்டுப்படுத்த போகிறோம் என்பதை சிந்திருக்க வேண்டும்.

தற்போது என்ன நடந்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு (SLPP) 50 லட்சம் வாக்குகள் இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்ததன் காரணமாகவே 50 லட்சம் வாக்குகள் 65, 69 லட்சமாக மாறியது.

இதனை நன்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனை மறந்து விட்டனர். எதிர்காலத்தில் மன்னராக வர வேண்டும் என்று எதிர்பார்க்கும் நபர்கள் தற்போது எப்படி பேசுகின்றனர்?, அவர்கள் சுதந்திரக் கட்சியை இப்படித்தான் விமர்சிப்பார்கள் என்றால், அவர்கள் எப்படி மன்னராக போகின்றனர் என்பதை பார்ப்போம்.

இது வேறு யாருமல்ல நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa). தந்தை இப்படியெல்லாம் பேசமாட்டார். தற்போது அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் சுதந்திரக் கட்சிக்கு 15 லட்சம் வாக்குகளை வழங்கியவர்களுக்கு கடன்பட்டுள்ளனர் என நாமல் கூறுவதை பார்த்தேன்.

எங்கு சென்று கூறினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். எவருக்கும் பயந்து நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படியான கதைகளை கூறும் போது, அதனை புரிந்துக்கொள்ளக் கூடிய அறிவு இருக்க வேண்டும்.

இந்த கதைகளை வேறு நபர்களிடம் சென்றுக் கூறுங்கள். நாங்கள் ஊமைகளோ, செவிடர்களோ, குருடர்களோ அல்ல. செய்யும் தவறுகள் எமக்கு தெரிகின்றது, கேட்கின்றது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Pages