ஓட்டமாவடி பிரதேச சபையின் துரித நடவடிக்கையால் இறைச்சி விற்பனை விலை 1கிலோ 850 ரூபாய் - KALPITIYA VOICE - THE TRUTH

Monday, January 17, 2022

ஓட்டமாவடி பிரதேச சபையின் துரித நடவடிக்கையால் இறைச்சி விற்பனை விலை 1கிலோ 850 ரூபாய்

 


01. தனி இறைச்சி விற்பனை விலை  1 Kg - 1000 ரூபாய்


02. கலவன் இறைச்சி விற்பனை விலை 1kg  850 ரூபாய்


ஓட்டமாவடி பிரதேச மாட்டிறைச்சிக் கடைகளில் வெவ்வேறுபட்ட விலைகளில் இறைச்சி விற்பனை செய்யப்படுவது குறித்து பிரதேச மக்களினால் சபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபை துரித நடவடிக்கை எடுத்துள்ளது.


இவ்விடயத்தில் அவசர கவனஞ்செலுத்திய  கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் விசேட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16.01.2022) இரவு சபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


கோறளைப்பற்று மேற்கு-ஓட்டமாவடி, கோறளைப்பற்று-வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாட்டிறைச்சிகடை உரிமையாளர்கள், கால்நடை மொத்த விற்பனையாளர்கள், பள்ளிவாயல்களில் தலைவர்கள், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேச முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 


இக்கூட்டத்தில் மாட்டிறைச்சிக்கான

திடீர் விலையேற்றம் குறிந்து கலந்துரையாடப்பட்டதுடன், இறைச்சிக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், மாடுகளைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.


இதன் போது இறைச்சி விற்பனை விலை குறித்து பின்வரும் தீர்மானங்கள்  முடிவுகளாக தவிசாளர்

ஏ.எம்.நெளபரினால் அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Pages