தொழில்நுட்ப வளர்ச்சி : சிறுவனுக்கு பதிலாக பாடசாலைக்கு சென்று பாடம் படிக்கும் ரோபோ - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Sunday, January 16, 2022

தொழில்நுட்ப வளர்ச்சி : சிறுவனுக்கு பதிலாக பாடசாலைக்கு சென்று பாடம் படிக்கும் ரோபோ

 


ஜெர்மனியில் 7 வயது சிறுவனுக்காக அவதார் ரோபோ ஒன்று பாடசாலைக்கு சென்று கல்வி கற்கும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த சிறுவன் ஜோசுவாமார்டிங்லி (7) கடுமையான நுரையீரல் பாதிப்பு காரணமாக, கழுத்தில் குழாய் இணைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருக்கு பதிலாக அவதார் என்ற ரோபோ, பாடசாலைக்கு சென்று, சிறுவன் வீட்டிலிருந்து பாடம் படிக்க உதவி செய்து வருகின்றது.

ஜோசுவா அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு பாடங்களை கவனிக்கும் அவதார் ரோபோ, ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஜோசுவா பதிலளிக்க உதவி செய்து வருகின்றதுடன், சிறுவன் தனது வகுப்பு தோழர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவி வருகின்றது.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages