நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் வழங்கப்படாவிட்டால் கடுமையான மின்வெட்டு - KALPITIYA VOICE - THE TRUTH

Monday, January 17, 2022

நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் வழங்கப்படாவிட்டால் கடுமையான மின்வெட்டு

 


இலங்கை கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்களில் உள்ள எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் வழங்கப்படாவிட்டால் கடுமையான மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித இது குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், நிலைமை மோசமாகும் பட்சத்தில் ரயில்கள் ஸ்தம்பிக்க நேரிடலாம் எனவும் தெரிவித்தார்.

பல நாட்களாக நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்குவதற்கான நிதியை வழங்குமாறு மத்திய வங்கிக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எரிபொருளை இறக்குவதற்கு தேவையான டொலர்கள் வழங்கப்படாவிடின் அடுத்த வாரத்திற்குள் நாட்டில் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்சாரம் இல்லாமல் அரை நாள் இருக்கும் எனவும் அவர் கூறினார். இதனிடையே, சுமார் 50 வீதமான தொழிற்சாலைகள் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Pages