இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுகளை விட அதிக லாபம் ஈட்டும் மியன்மார் - KALPITIYA VOICE - THE TRUTH

Thursday, February 24, 2022

இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுகளை விட அதிக லாபம் ஈட்டும் மியன்மார்

 


இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுகளை விட அதிக விலை கிடைப்பதாகவும் இலங்கைக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதில் தடை எதுவுமில்லை எனவும் மியன்மார் தெரிவித்துள்ளது.

மியன்மார் வேறு நாடுகளுக்கு ஒரு தொன் அரிசியை 340 முதல் 350 அமெரிக்க டொலர்களுக்கு ஏற்றுமதி செய்தாலும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் போது ஒரு தொன் அரிசிக்கு 440 முதல் 450 அமெரிக்க டொலர் விலை கிடைப்பதாக மியன்மார் அரிசி களஞ்சியத்தின் செயலாளர் U Than Oo செய்தி இணையத்தளம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் போது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வரையறைகள் குறைவு என்பதுடன் தரக் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மியன்மார், ஐரோப்பா நாடுகள், சீன போன்ற நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. இலங்கைக்கு மியன்மார் கடந்த ஜனவரி மாதம் ஒரு லட்சம் தொன் வெள்ளை அரிசியையும 50 ஆயிரம் தொன் அவித்து உலர வைத்த அரிசியையும் ஏற்றுமதி செய்துள்ளது.

No comments:

Post a Comment

Pages