கற்பிட்டி EDA சமூக சேவை அமைப்பால் பெருமதி வாய்ந்த புத்தகங்கள் அன்பளிப்பு (படங்கள்) - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Tuesday, February 8, 2022

கற்பிட்டி EDA சமூக சேவை அமைப்பால் பெருமதி வாய்ந்த புத்தகங்கள் அன்பளிப்பு (படங்கள்)

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் க.பொ.த(உ.த) வணிகப்பிரிவு மாணவர்களின் கற்றல் செயல்பாட்டை மேற்படுத்துவதற்கான ஒரு அங்கமாக கடந்து பத்து வருடத்திற்கான (கணக்கீடு வணிகக்ககல்வி,பொருளியல்)வினா விடை தொகுப்பு SMART VIEW எனப்படும் புத்தகத்தொகுதி கல்பிட்டி EDA அமைப்பினரால் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கி வைக்கப்பட்டது, மாணவர்களுடன் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைப்பின் உறுப்பினரான சட்டத்தரணி M.R.M.சபீஸ்,அமைப்பின் உறுப்பினரும் அமானா வங்கி நிறைவேற்று அதிகாரியும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளருமான M.H.M.முந்திர் மற்றும் வணிகத்துறை மேற்பார்வையாளர் A.H.M.M.ஸாபி ஆசிரியர் வணிகப்பாட மேலதிக ஆசிரியர் கஜூன் ஹகீம் பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

EDA அமைப்பினர் நீண்டகாலமாக வணிகப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

2020 வருடம் EDA அமைப்பின் வழிகாட்டலில் வணிகப்பிரிவு மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages