INTER SCHOOL என்ற Whats app குறூப்புக்குள் இணைய வேண்டாம் : பொலீசார் அறிவிப்பு

 


INTER SCHOOL என்ற Whats app குறூப்புக்குள் இணைய வேண்டாமென Whats app பாவனையாளர்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.



 INTER SCHOOL என்ற Whats app குறூப் உங்களுக்கு அழைப்பு விடுத்தாலும் எச்சரிக்கையாக இருக்குமாறும் மேல் மாகாண புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் எச்.சீ.ஏ. பஷ்பகுமார தெரிவித்துள்ளதுடன் இந்த Whats app குறூப் டெஷ் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்புக் குச் சொந்தமான Whats app குறூப் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 



இந்த Whats app குறூப்புக்குள் ஒருதடவை இணைந்து விட்டால் வெளியேற முடியாது என்பதுடன் தனது Whats app குறூப்பில் இருக்கும் அனைவரையும் இதனோடு இணைகுமாறும் குறுந்தகவல் கிடைக்கு மென்றும் அவர் தெரிவித்தார். 



இது தொடர்பில் ஒழுங்கான முறையில் விசாரணைகளை நடத்து மாறு, மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலம் அறி வித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments