நாட்டில் தங்கத்தின் விலை 2 இலட்சம் ரூபாவாக உயர்வு - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, March 30, 2022

நாட்டில் தங்கத்தின் விலை 2 இலட்சம் ரூபாவாக உயர்வு


 நாட்டில் தங்கத்தின் விலை இன்றும் 5 ஆயிரம் ரூபாவால் அதிகரித்து 2 இலட்சம் ரூபாவாகஉயர்ந்து வரலாற்றில் முதல் தடவையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று காலை இந்த அதிகரிப்பு ஏற்பட்டது என்று தங்க வியாபாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி நெகிழ்வான நிலைக்கு விடப்பட்டதால் டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால் இலங்கையில் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று 30 ஆம் திகதி  22 கரட் தங்க ஆபரணத்தின் விலை  ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நேற்று ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாயாக காணப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கம் பவுண் ஒன்று 2 இலட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது, நேற்று 24 கரட்

தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages