பொய்ப் பிரசாரங்கள் தொடர்பாக மக்­களை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு காதி­நீ­தி­ப­திகள் போரம் தீர்­மா­னித்­துள்­ளது. - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, March 30, 2022

பொய்ப் பிரசாரங்கள் தொடர்பாக மக்­களை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு காதி­நீ­தி­ப­திகள் போரம் தீர்­மா­னித்­துள்­ளது.

 (ஏ.ஆர்.ஏ.பரீல்)


காதி நீதி­மன்­றங்கள் மற்றும் காதி நீதி­ப­திகள் மீது தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் முன்­வைக்­கப்­பட்­டு­வரும் பொய் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் மக்­களை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு காதி­நீ­தி­ப­திகள் போரம் தீர்­மா­னித்­துள்­ளது.

அண்­மையில் பிர­பல தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தொகுப்­பாளர் சமு­தித சம­ர­விக்­ரம காதி­நீ­தி­மன்­றங்கள் மற்றும் காதி முறைமை பற்றி ஒரு சிலரை நேர்­கண்ட போது தவ­றான பொய்­யான கருத்­துகள் தெரி­விக்­கப்­பட்­டன. காதி நீதி­மன்­றங்­களை இல்­லாமற் செய்­யு­மாறு கோரப்­பட்­டது.

இதன் உண்மைத் தன்­மையை அதே யுடியூப் நிகழ்ச்சி மூலம் மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு தனக்கு அனு­மதி வழங்­கு­மாறு காதி நீதி­வான்கள் போரத்தின் உப­த­லை­வரும், இரத்­தி­ன­புரி காதி­நீ­தி­வா­னு­மா­கிய எம்.இப்ஹாம் யெஹ்யா நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் சிரேஷ்ட உதவிச் செய­லாளர் ஆனந்தி கன­க­ரத்­தி­னத்தைக் கோரி­யுள்ளார்.
அனு­மதி கோரி கடந்த 21ஆம் திகதி அவர் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் சிரேஷ்ட உதவிச் செய­லா­ள­ருக்கு கடி­த­மொன்­றி­னையும் அனுப்பி வைத்­துள்ளார்.

அண்­மையில் தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தொகுப்­பாளர் சமு­தித நால்­வரை நேர்­கண்ட போது காதி­நீ­தி­வான்கள் தங்­க­ளிடம் நீதி­கோ­ரி­வரும் பெண்­க­ளிடம் பாலியல் இலஞ்சம் கோரு­வ­தா­கவும், இலஞ்சம் பெற்­றுக்­கொண்டு தவ­றான தீர்ப்­புகள் வழங்­கு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்தக் குற்­றச்­சாட்­டு­க­ளுக்குப் பதிலளிக்கும் வகையிலே அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காதிநீதிபதிகள் போரத்தின் உபதலைவர் கலந்துகொண்டு தெளிவுகள் வழங்கவுள்ளார்.- Vidivelli

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages