அமைச்சர்களின் கைக்கூலியாக மாரிய பௌத பிக்குகள் - ஒமல்பே சோபித தேரர் தெரிவிப்பு - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, March 9, 2022

அமைச்சர்களின் கைக்கூலியாக மாரிய பௌத பிக்குகள் - ஒமல்பே சோபித தேரர் தெரிவிப்பு

 


சில பௌத்த பிக்குகள் அமைச்சர்களின் அடிமைகளாக மாறியுள்ளனர் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சில பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளினால், ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பௌத்த சாசனத்திற்கு ஏற்பட்டுள்ள அழிவிற்கு சில மாநாயக்க தேரர்களும் பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள பௌத்த மத ஆலோசனை சபை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சபையின் உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகமே நிர்ணயம் செய்கின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆலோசனை சபையினால் பௌத்த மதத்திற்கு எந்தவொரு சேவையும் ஆற்றப்படவில்லை என ஒமல்பே சோபித தேரர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages