எரிபொருள் பாவனையாளர்களுக்கு இனிமேல் வரிசை தேவையில்லை மகிழ்ச்சியான தகவல் - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, March 6, 2022

எரிபொருள் பாவனையாளர்களுக்கு இனிமேல் வரிசை தேவையில்லை மகிழ்ச்சியான தகவல்

 


நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு தேவையான எரிபொருள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கப்பலில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மேலும் இரண்டு எண்ணெய் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

அவற்றுக்கான டொலர் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இறக்கும் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீணான அச்சம் காரணமாக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென, நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பல நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகன சாரதிகள் காத்திருந்து அதனை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment

Pages