சிவப்பு நிற சால்வையால் பயனில்லை - பதில் அளித்த சமல் ராஜபக்ச - KALPITIYA VOICE - THE TRUTH

Wednesday, April 6, 2022

சிவப்பு நிற சால்வையால் பயனில்லை - பதில் அளித்த சமல் ராஜபக்ச

 


எப்போதும் சிவப்பு நிற சால்வையை அணிந்து வரும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று சால்வையின்றி சபையில் பிரசன்னமாகியிருந்தார்.

சமல் ராஜபக்சவிடம் ஏற்பட்டிருந்த இந்த மாற்றம் குறித்து பலரும் பேசிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. சமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் முன் வரிசையில் நான்காவது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

இதனிடையே, சால்வை அணியாதது குறித்து ஊடகவியலாளர்கள் குழு அவரிடம் கேள்வி எழுப்பிய போது, ​​அவர் உறுதியான பதில் அளிக்கவில்லை. “சால்வையால் பயனில்லை. எனக்கு ஆடை வேண்டும்” என சமல் ராஜபக்ச கூறியுள்ளார்.   

No comments:

Post a Comment

Pages