தெருக்களில் சிலிண்டர் ஒன்றை பாதுகாப்பதற்கு ஒருவரிடம் இருந்து தலா 50 ரூபாவை வசூல்

 


ஹட்டனில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ளும் வகையில் இரவு பகலாக எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திற்கு முன்னால் எரிவாயு சிலிண்டர்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களே காணாமல் போயுள்ளன. இதேவேளை, சிலிண்டர் ஒன்றை பாதுகாப்பதற்கு ஒருவரிடம் இருந்து தலா 50 ரூபாவை குறித்த நபர்கள் அறவிட்டு வந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளன. மேலும் இதற்கு பொறுப்பு கூறுவதற்கும் யாரும் இல்லாத நிலைமை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

Post a Comment

0 Comments