அட்டுலுகம சிறுமி விவகாரம்! பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

 


பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இந்த கொலையை செய்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா, மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 

Post a Comment

0 Comments