முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்! ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள் - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Monday, May 30, 2022

முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்! ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள்

 


பலரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருளாக முட்டை உள்ளது. முட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். எனினும், முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் உயிரை பறிக்கும் பக்கவிளைவுகள் கூட ஏற்படலாம்.

முட்டை சாப்பிடும்போது சாப்பிடக்கூடாத உணவு பொருட்கள்

சர்க்கரை

முட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும்.  

இந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது.

சோயா பால்

காலை நேரத்தில் முட்டையும், சோயா பாலையும் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. முட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

இது உடல்களில் சிதைவு பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது.  

வாத்து இறைச்சி

முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது குளிர்ச்சி மற்றும் இனிப்பு குணங்கள் உள்ளது. முட்டையில் புரதமும், குளிர்ச்சி பண்புகளும் உள்ளது.

ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தேநீர் (டீ)

முட்டை சாப்பிட்ட பிறகு அதன் வாசனையை போக்க டீ குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமற்ற செயல் என்று அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

டீயை இலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும். மேலும் இதனால் நமது குடல் இயக்கங்கள் பாதிக்குமாம்.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages