“உங்கள் குழந்தையை பாதுகாத்துகொள்ளுங்கள்”என்று எழுதுவதை விட… இதைச்செய்யுங்கள் - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, May 29, 2022

“உங்கள் குழந்தையை பாதுகாத்துகொள்ளுங்கள்”என்று எழுதுவதை விட… இதைச்செய்யுங்கள்

 


ஊரில் உள்ள போதைவியாபாரிகளை அடையாளம் கண்டு, போதைபாவனையாளர்களை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முன்வாருங்கள். “எனக்கு ஏன் தேவையில்லாத பிரச்சினை” என்றிருந்தால் இதே போல பல சம்பவங்கள் உங்கள் ஊரிலும் மிக விரைவில் நடக்கும்.

ஊரில் உள்ள பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்விசார் செயற்பாடுகளும், தொலைபேசி பாவனையும்,பண புழக்கம்,பாடசாலை நேரங்கள் தவிர்ந்த செயற்பாடு என்பது பற்றி அக்குடும்பமும்,பள்ளி நிர்வாகமும் நன்கு அறிந்திருக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.


பெண்களின் கல்வி வளர்ச்சி, இளவயது திருமணத்தடை,குடும்ப வாழ்வில் பெண்களின் பங்களிப்பு என குடும்ப சம்பந்தமான நல்ல சமூக செயற்பாடுகள் பற்றி பெண்களுக்கு மேலதிமாக அறிவூட்டல் செயற்பாடுகளை செய்ய ஊரில் உள்ளவர்கள் முன்வர வேண்டும்.

ஊரில் உள்ள பள்ளி நிர்வாகம், போதை தடுப்பு, இளைஞர்களை தீய,கெட்ட விடயங்களிலிருந்து தவிர்ப்பது பற்றியும்,இளைஞர்களுடன் சேர்ந்து மிகப்பெரியதொரு செயற்திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

தொழில்சார் விடயங்களும்,குடும்ப பராமரிப்பு பற்றி பள்ளி நிர்வாகம் அடிக்கடி ஊர்மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
……..
16+ வயதில் இளம் தாய். கூலி வேலை கணவர். வேலை நேர களைப்பை இல்லாது போக்க போதை பொருள் பாவனை. குழந்தைகள் எந்த பாடசாலை போகிறார்கள், என்ன தரத்தில் படிக்கிறார்கள் என்பது என்று குழந்தைகள் பற்றி எதுவும் தெரியாது. கஷ்டமான காலத்தில் திருட்டு சம்பவங்கள், என பல விடயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

பாடசாலை கல்வி இல்லாத,பள்ளிவாயல் தொடர்பு அற்ற, கட்டுப்பாட்டுன் குழந்தை வளர்ப்பு இல்லாத, அதீத பண புழக்கம் கொடுத்து பிள்ளைகளின் செலவு பற்றி அறியாத,குடும்ப வாழ்வு பற்றிய தெளிவு இல்லாத பெற்றோர்கள் இருக்கும் ஊர், என காரணிகளாக சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படியான கொலை இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். பொலிசார் கொலைகாரனை அடையாளம் கண்டிருப்பார்கள், ஏதோ காரணத்திற்காக,அல்லது இன்னும் ஏதாவது புலப்படுகிறதா என்று கோணங்களில் விசாரனை நடைபெறுகிறது.

இந்த ஊரில் மட்டுமல்ல, பல முஸ்லிம் ஊர்களில் போதைபாவனையும்,சமூக கட்டுப்பாட்டுடன் வாழ்தல் பற்றிய விழிப்புணர்வு செய்வது கட்டாயம்.

விசாரனை முடிவு,மோசான ஒரு பாடத்தை சொல்லி தரபோகிறது. !

-AZEEM JAHUFER-

No comments:

Post a Comment

Pages