பொருளாதாரநெருக்கடி: தீர்வு யார் கையில்? - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, May 7, 2022

பொருளாதாரநெருக்கடி: தீர்வு யார் கையில்?

 


எஸ்.என்.எம்.சுஹைல்

நாடு முட்டுச் சந்­தியில் நிற்­கி­றது. அடுத்த கட்­டத்­திற்குச் செல்ல முடி­யாத நிர்க்­கதி நிலை­யொன்றை தோற்­று­வித்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ச. பிழை­யான விவ­சாய கொள்கை மற்றும் பொரு­ளா­தார திட்­ட­மிடல் என்­ப­னவே இந்த நிலை­மைக்கு உட­னடிக் கார­ணங்­க­ளாகும். 1978 ஆம் ஆண்­டுக்கு பின்னர் பின்­பற்­றப்­பட்ட திறந்த பொரு­ளா­தார கொள்கை, வரை­ய­றை­யற்ற வெளி­நாட்டு இறக்­கு­மதி, உள்­நாட்டு உற்­பத்­திகள் ஊக்­கு­விக்­கப்­ப­டாமை என்­பன நீண்­ட­கால கார­ணி­க­ளாகும்.

இன்­றைய பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு திற­னற்ற நிர்­வா­கத்­து­றைக்கும் பிர­தான பங்கு இருக்­கி­றது. இத­னால்தான், நிலை­மையின் காரண கர்த்­தா­வான ஜனா­தி­பதி கோட்­ட­பாய ராஜ­பக்­சவை ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து வில­கும்­படி வலி­யு­றுத்தி தொடர்ச்­சி­யாக ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அத்­தோடு, அரசின் நிர்­வாக கட்­ட­மைப்­பு­களும் இந்த நிலை­மைக்கு பொறுப்புக் கூற வேண்­டி­யவை.

ஊழல், மோசடி, துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் வீண் விர­யங்­க­ளையும் பிரத்­தி­யேக கார­ணி­க­ளாக குறிப்­பி­டலாம். அரச நிர்­வாக கட்­ட­மைப்­பிலும் அதி­கார தரப்­பிலும் ஊழல் மோச­டிகள் நிறைந்­தி­ருப்­ப­தாக மக்கள் விடு­தலை முன்­னணி தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வரு­கின்­றது. ஊழல் மோச­டிகள் பொரு­ளா­தார முன்­னேற்­றத்தை தடுப்­பதில் பெரும் பங்­காற்­று­கின்­றன என்­பதை மறுக்க முடி­யாது.

இந்­நி­லையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி நிலை­யி­லி­ருந்து நாட்டை உட­ன­டி­யாக மீட்­டெ­டுக்க முடி­யாது. இன்னும் சில­ மா­தங்­களில் இந்­நி­லைமை மேலும் உக்­கி­ர­ம­டையும். இப்­போதே, முறை­யான பொரு­ளா­தார கொள்கைத் திட்­ட­மொன்றை அமுல்­ப­டுத்­தி­னா­லேயே இன்னும் ஓரிரு வரு­டங்­க­ளுக்குள் நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரலாம்.

இன்­றைய நிலையில் ஆளும் தரப்பில் நம்­பிக்­கை­யி­ழந்­துள்ள நிலை­யி­லேயே அவர்­களை ஆட்­சி­யி­லி­ருந்து வீட்­டுக்குச் செல்­லும்­படி மக்கள் வீதிக்கு இறங்கி போராடி வரு­கின்­றனர். எனினும், ஜன­நா­யக முறைப்­படி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட இவர்கள் அர­சி­ய­ல­மைப்­பின்­ப­டியே இன்று ஆட்­சியில் இருக்­கின்­றார்கள். மக்கள் தாம் வழங்­கிய ஆணையை மீளப் பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். எனவே இவர்கள் நாட்டின் நலன்­க­ருதி ஆட்சி அதி­கா­ரத்­தி­லி­ருந்து விடை­பெற வேண்டும்.

எனினும், மற்­று­மொரு தேர்­தலை சந்­திக்கும் நிலை­மையில் இன்று நாடு இல்லை. அத்­தோடு, அர­சி­ய­ல­மைப்­பின்­படி உட­ன­டி­யாக தேர்­த­லுக்குச் செல்­லவும் முடி­யாது. நீதி­மன்ற ஆலோ­ச­னைக்­க­மை­வா­கவே தேர்­த­லொன்­றுக்கு முகம்­கொ­டுக்க முடியும். அத்­தோடு, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியை பதவி விலகச் செய்தல் என்ற கோரிக்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தி­னாலும் அடுத்­தது என்ன என்ற கேள்­விக்கு விடை இல்லை. இருப்­பினும், அர­சி­ய­ல­மைப்பின் சட்ட ஏற்­பா­டு­க­ளுக்­க­மைய இவற்றை சீர் செய்ய முடியும். என்­றாலும் அதி­கார பேராசை பிடித்த ராஜ­ப­க்சாக்கள் நாட்டின் நலன் கருதி பதவி வில­கு­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

ஜனா­தி­பதி இடைக்­கால அரசை அமைப்­பது தொடர்­பாக கடந்த வாரம் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அத்­தோடு, பிர­தமர் பதவி வில­குவார் என ஜனா­தி­பதி கூறி­ய­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. இதனை பிர­த­மரின் தரப்பு மறுத்­தி­ருந்­தது. அத்­தோடு, தான் எக்­கா­ர­ணத்தைக் கொண்டும் பதவி விலகப் போவ­தில்லை என பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ச திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார். ஆளும் கட்­சியின் நிலைமை இப்­ப­டித்தான் இருக்­கி­றது.

ஆளும் கட்­சியின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக இப்­போது இருப்­பவர் நிதி மற்றும் நீதி­ய­மைச்சர் அலி சப்ரி. தனது சட்ட மற்றும் மொழிப்­பு­லமை மூலம் அவர் சர்­வ­தேச நாணய நிதி­யத்­து­ட­னான பேச்­சு ­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கிறார். ராஜ­பக்ச தரப்பில் யாருமே முன்­வ­ராத நிலையில் அல்­லது அதற்­கான தகு­தி­களைக் கொண்­டி­ராத நிலையில், நிதி­ய­மைச்சைப் பொறுப்­பெ­டுத்­துள்­ளதன் மூலம் இன்­றைய பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து நாட்டை ஓர­ளவு மீட்­ப­தற்­கான பங்­க­ளிப்பை அவர் வழங்­கு­கிறார். எனினும் அவ­ரது முயற்­சிகள் எந்­த­ளவு தூரம் வெற்­றியைத் தரும் என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்தி உட­ன­டி­யாக ஆட்­சி­ய­மைக்­கவோ அல்­லது ஜனா­தி­பதி யோசனை முன்­வைத்­துள்ள இடைக்­கால அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­ப­தற்­கான விருப்­பத்­தையோ வெளிப்­ப­டுத்­த­வில்லை. அக்­கட்­சியின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாச மக்­களின் ஆணை­யு­ட­னேயே ஆட்­சியை பெற்­றுக்­கொள்வோம் என கூறி­யி­ருக்­கின்றார்.

ஐக்­கிய மக்கள் சக்­திக்குள் பொரு­ளா­தார நிபு­ணர்­க­ளான கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்­ர­ம­ரத்ன போன்றோர் இருக்­கின்­றனர். இவர்கள் நீண்­ட­கா­ல­மாக இந்த அர­சாங்­கத்தை எச்­ச­ரித்து வந்­தனர். அத்­தோடு, அர­சாங்­கத்தின் பிழை­யான பொரு­ளா­தார கொள்­கைகள் பற்றி தெளி­வு­ப­டுத்தி வந்­தனர். இதனை அர­சாங்­கமும் மக்­களும் பெரி­தாக அலட்­டிக்­கொள்­ள­வில்லை. இன்று நிலைமை மோச­மா­கி­யி­ருக்­கின்­றது.

பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றா­வது பெரிய கட்­சி­யாக ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியே இருக்­கி­றது. அக்­கட்­சியும் கட்­சியின் தலை­மையின் இன்­றைய அர­சியல் நகர்­வு­களை பார்க்­கும்­போது இரண்டும் கெட்டான் நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கருத்­துக்­களை ஊட­கங்கள் மூல­மாக தெரி­வித்து வந்­தாலும் அர­சாங்­கத்­தோடு தொடர்ந்து டீல் வைத்­துக்­கொண்டு நகர்­வ­தா­கவே தோன்­று­கின்­றது. இடைக்­கால சர்­வ­கட்சி அர­சாங்­கத்தை நிறு­வு­வதில் ஆர்­வம்­காட்டும் சுதந்­திரக் கட்­சியின் பொரு­ளா­தார கொள்­கையில் தெளிவு இல்லை. ஆனாலும், 2019 க்கு பின்னர் அர­சாங்­கத்தின் விவ­சாய கொள்­கை­யிலும் இவர்­க­ளுக்கு பெரும் பங்கு இருக்­கி­றது. அமைச்­ச­ர­வையில் இடம்­பி­டித்­தி­ருந்த சு.க. மக்கள் புரட்­சி­யொன்று ஏற்­ப­டும்­வரை அமை­தி­யாக இருந்­து­விட்டு பின்­னரே அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி சுயா­தீ­ன­மாக செயற்­படப் போவ­தாக அறி­வித்­தது.

நாட்டின் இன்­றைய நிலை­மைக்கு முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூடுதல் பொறுப்பு கூற வேண்­டி­யவர். உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்­பான பல குற்­றச்­சாட்­டுகள் அவர் மீது முன் வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் 2018 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பை மீறி ராஜ­ப­க்சாக்­களை மீண்டும் அதி­கா­ரத்­துக்கு கொண்­டு­வந்­த­வரும் சிறி­சேன தான். அத்­தோடு, நல்­லாட்சி அர­சாங்­கத்­தோடு உற­வு­களை முறித்­துக்­கொண்ட மைத்­திரி 2019 ஜனா­தி­பதித் தேர்­தலில் கோட்­ட­பாய ராஜ­பக்ச போட்­டி­யி­டு­வ­தற்கு பிர­தான கார­ண­க­ர்த்­தா­வா­கவும் இருந்தார். எனவே, நாட்டின் நிர்­வா­கத்­து­றையில் அடுத்­த­டுத்து வந்த ஆட்­சி­யா­ளர்­களின் பிழை­யான நட­வ­டிக்­கை­யிலும் குறிப்­பாக மஹிந்த ராஜ­பக்ச, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இறுதி ஆட்சிக் காலப் பகுதி மற்றும் கோத்­த­பாய ராஜ­ப­க்சவின் முழு­மை­யான ஆட்சிக் காலப்­ப­கு­தி­யிலும் அர­சி­ய­ல­மைப்பை மீறும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. 20 ஆம் திருத்­தத்­திற்கு சுதந்­திரக் கட்சி முழு ஆத­ரவை வழங்­கிய நிலையில் 19 தான் சரி என மைத்­தி­ரி­பால சிறி­சேன இப்­போது கூறு­கின்றார். ஆக அவர் பொறுப்புக் கூறலில் இருந்து விடு­பட முடி­யாது.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பே பாரா­ளு­மன்றில் நான்­கா­வது கூடுதல் ஆச­னங்­களை வைத்­தி­ருக்கும் கட்­சி­யாகும். அக்­கட்சி தமி­ழர்­களின் கோரிக்­கை­க­ளுடன் இன்­றைய அர­சியல் சூழ்நிலை­களை அணு­கு­வதை காண முடி­கின்­றது. இருந்­தாலும் அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன் மற்றும் இரா­ச­மா­ணிக்கம் சாணக்­கியன் ஆகி­யோரின் நகர்­வு­களை பார்க்கும் போது சில மாற்­றங்­களை காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

மூன்றே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வைத்­தி­ருந்­தாலும் தேசிய மக்கள் சக்தி அல்­லது மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யா­னது அர­சுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் பல­மாக செயற்­ப­டு­வ­தா­கவே தோன்­று­கி­றது. ஐக்­கிய மக்கள் சக்­தியும், தேசிய மக்கள் சக்­தியும் நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்கும் எதிர்ப்பு பேர­ணி­க­ளா­னது அர­சாங்­கத்தை அச்­சு­றுத்­து­வ­தா­கவே தோன்­று­கின்­றது.

குறிப்­பாக மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யா­னது ஊழ­லுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தையும் அர­சியல் கொள்கை உரு­வாக்­கத்தில் ஆர்வம் காட்­டு­வ­தா­கவும் தெரி­கி­றது. எனினும் அவர்­களின் முறை­யான பொரு­ளா­தார திட்­டத்­தையோ கொள்­கை­யையோ நம்மால் காண முடி­ய­வில்லை.

பாரா­ளு­மன்­றத்தில் ஒற்றை பிர­தி­நி­தித்­து­வத்தை வைத்­தி­ருந்­தாலும் இன்று மிகவும் பேசப்­படும் நப­ராக ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க இருக்­கிறார். 1978 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்சி அறி­மு­கப்­ப­டுத்­திய பொரு­ளா­தார கொள்­கையில் முரண்­பாடு இருந்­தாலும் ரணில் விக்­ர­ம­சிங்க இன்று பேசும் பொரு­ளா­தார விட­யங்கள் ஏற்­பு­டை­ய­தா­கவே இருக்­கின்­றது. குறிப்­பாக எதிர்­கா­லத்­தையும் இளை­ஞர்­க­ளையும் மையப்­ப­டுத்­தி­ய­தாக அவரின் கருத்­துக்கள் வெளிப்­ப­டு­வதை காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. அத்­தோடு, சர்­வ­தே­சத்தை அணுகி எவ்­வாறு பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலும் அவர் தெளி­வாக இருக்­கின்றார்.

பொரு­ளா­தார கொள்கை, எதிர்­கால சந்­த­தி­யி­னரின் இருப்பு மற்றும் நாட்டின் நலன் குறித்து பேசும் ரணில் விக்­ர­ம­சிங்க தான் பல­மாக இருப்­பினும் அர­சியல் கட்சி ரீதியில் மிகவும் பல­வீ­ன­மாக இருப்­ப­தையே உணர முடி­கின்­றது. இலங்கை மக்­களால் புரிந்­து­ கொள்­ளப்­ப­டாத ஒரு அர­சி­யல்­வா­தி­யாக இருந்த விக்­ர­ம­சிங்க இன்று மெல்ல மெல்ல புரிந்­து­கொள்­ளப்­ப­டு­கின்ற நப­ராக தோற்றமளிக்கிறார். எனினும், அடுத்த தேர்தலிலேயே அவரின் கொள்கைகள் எந்தளவு வெற்றி பெறும் என்பதை அறிய முடியும்.

இதுதவிர, இந்த பொருளாதார நெருக்கடிகளிலும் இக்கட்டான அரசியல் சூழ்நிலையிலும் பதவிகளின் பின்னாலும் குறுகிய அரசியல் நோக்கிலான சண்டைகளினாலும் நாற்றம் எடுத்திருக்கிறது முஸ்லிம் அரசியல். எனவே, அக்கட்சிகளால் இன்றைய தேசிய பிரச்சினைக்கு எந்தவித தீர்வையும் வழங்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.

ஜனா­தி­ப­தியும் அர­சாங்­கமும் பதவி விலக வேண்டும் என வலி­யு­றுத்தி காலி முகத்­தி­டலில் இளை­ஞர்கள் முன்­னெ­டுத்து வரும் எழுச்சிப் போராட்­ட­மா­னது ஒரு மாதத்தை எட்­டு­கின்­றது. இந்­நி­லையில், ராஜ­பக்­சாக்­களை வீட்­டுக்கு அனுப்­பி­விட்டு  அடுத்த நகர்வு என்ன என்­பது பற்­றிய தெளிவும் இளை­ஞர்­க­ளி­டத்தில் இருத்தல் அவ­சி­ய­மாகும். அவ்­வாறு ஒரு திட்­டத்தின் ஊடாக அடுத்­த­கட்­டத்தை நோக்கி நகர்­வதன் ஊடா­கவே வெற்­றி­க­ர­மா­ன­ பு­ரட்­சி­யாக இதனை மாற்ற முடியும். வெறு­மனே ராஜ­ப­க்சாக்­க­ளுக்கு எதி­ரான போராட்­ட­மாக மாத்­திரம் இதனை முன்­னெ­டுக்­காது நாட்டை மீட்­டெ­டுத்து சரி­யான திசையில் கொண்டு செல்­வ­தாக அமைய வேண்டும். அதற்கான சரியான தலைமைத்துவத்தை தெரிவு செய்து நகர வேண்டும். – Vidivelli

No comments:

Post a Comment

Pages