ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் இராணுவத்தின் ரகசிய ட்ரோன்கள் - KALPITIYA VOICE - THE TRUTH

Monday, May 30, 2022

ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் இராணுவத்தின் ரகசிய ட்ரோன்கள்

 


ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் இராணுவத்தின் ரகசிய ட்ரோன்கள் குறித்து அண்மையில் வெளியான வீடியோவானது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரானில்  ஷாக்ரோஸ் மலைப்பகுதியில் உள்ள இராணுவ தளத்திலேயே குறித்த ட்ரோன்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல், உளவுபார்த்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காகவே  அந்நாட்டு அரசு இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து வெளியான வீடியோவில் நூறுக்கும் மேற்பட்ட  ட்ரோன்கள் ,ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் அணிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ஏமன் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சிரியா மற்றும் லெபனான் ஹெஸ்புல்லா அமைப்புக்கு தீவிரவாத பணிகளை மேற்கொள்ள ,தாக்குதல் ட்ரோன்களை ஈரான் வழங்கி வருவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஈரான் அரசு  வெளியிட்ட குறித்த வீடியோவானது உலகரங்கில் பெரும் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Pages