பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பேக்கரி உற்பத்திப் பொருட்களை பெறுவதற்காக வரிசைகள் ஏற்படக்கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சிறு அளவில் செயற்படும் பேக்கரிகள் மூடப்படும் நிலையை எதிர்நோக்கி வருவதன் காரணமாக இந்த நிலை உருவாகலாம் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
0 Comments