புதிய முறை அமுல் பதிவு செய்தவர்களுக்கே சமையல் எரிவாயு! - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Monday, May 30, 2022

புதிய முறை அமுல் பதிவு செய்தவர்களுக்கே சமையல் எரிவாயு!

 


ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்காக நுகர்வோரை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

அம்பகமுவ பிரதேசசபையின் செயலாளர் ருவனி சிதாரா கமகே தலைமையில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இந்த பதிவு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

ஹட்டன்-டிக்கோயா நகர சபை, ஹட்டன் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

தேசிய அடையாள அட்டை மற்றும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் உள்ளிட்டவைகள் இதன்போது கோரப்பட்டதுடன், குறித்த நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகைக்கு தங்கியிருப்பவர்களும் இந்த பதிவுகளில் உள்வாங்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages