ஏன் நாம் சொந்த தொழிலை அமைக்க இதுவரை இயலாமல் இருக்கின்றோம் (முழுமையாக படியுங்கள்) SLBI யின் ஆக்கம் - KALPITIYA VOICE - THE TRUTH

Monday, May 16, 2022

ஏன் நாம் சொந்த தொழிலை அமைக்க இதுவரை இயலாமல் இருக்கின்றோம் (முழுமையாக படியுங்கள்) SLBI யின் ஆக்கம்

 


படித்தாலும் படிக்கவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட வயது வந்த பிற்பாடு நல்லதொரு வேலையொன்றை தேடிக்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் எழுதப்படாத சட்டம் ஒன்றாக இருக்கிறது.

எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தாலும் சரி அல்லது படிக்காமல் விட்டாலும் சரி நல்லதொரு வேலை ஒன்றை தேடிக் கொண்டு அதற்குரிய வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் முயற்சியை ஒவ்வொருவரும் செய்தே ஆக வேண்டும்.

ஆனால் எந்த ஒரு இடத்திலும் எப்பாடு பட்டு என்றாலும் சொந்தக்காலில் நின்று உழைத்து முன்னேற வேண்டும் என்பதை பாடசாலைகளிலும் சரி குடும்பங்களிலும் சரி வலியுறுத்துவதே கிடையாது.

இப்படி ஒரு நல்ல வேலையை தேடிக் கொள்வது என்பதும் நாம் இன்னொருவரை பார்த்துதான் முடிவு செய்து கொள்கிறோமே தவிர எங்களுடைய உள்ளத்தில் தோன்றுகின்ற நாங்கள் சொந்தமாக உழைக்க வேண்டும் என்கிற ஆசையும் கூட வெறும் கனவாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. அதற்குரிய முயற்சிகளை அடி எடுத்து வைப்புகளை எந்தவிதத்திலும் மேற்கொள்வதற்கு எம்மை உந்தித்தள்ள கூடிய எந்த ஒரு விஷயமும் வாழ்வில் நடப்பது கிடையாது. தற்செயலாக ஏதேனும் ஒரு மாயாஜாலம் நடந்தால் மட்டுமே சொந்தக் காலில் நிற்பதற்கு திறம் படைத்தவர்களாக மாறலாம்.

வருடக்கணக்கில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து அதன் பிறகு இன்னொரு வேலை தேடி இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்து என்று காலத்தை, எங்களுடைய உழைப்பை வழங்குவதற்காக மட்டுமே செலவு செய்து இறுதியில் வெறும் கையோடு தான் இருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

அவ்வாறு கடினமாக வேலை செய்யும்போது எங்களுக்கான ஒரு முயற்சியை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று 10 வீதமானவர்களே முடிவு செய்துகொண்டு அந்த விடயத்தில் ரிஸ்க் எடுக்கிறார்கள்.

முதலில் சொந்தக் காலில் நிற்பது என்பது எங்களுடைய சுதந்திரத்தையும் சுய கவுரவத்தையும் பாதுகாக்கும் என்பதை உணர்ந்த பிற்பாடுதான் அதன் மூலம் எங்களுக்கு வருமானம் கிடைக்கலாம் வாழ்வில் முன்னேறலாம் என்கின்ற சிந்தனை வரவேண்டும்.

சுயமரியாதையை பற்றி கவலையே இல்லை என்கின்ற போது அவரவர்க்கு செய்யும் கூலித் தொழில் போதுமான ஒன்றாகும். மன நிறைவாகவும் இருக்கும்.

ஏனெனில் அவர்கள் எந்த விதத்திலும் கஷ்டப்பட்டு தங்களுடைய காலத்தையும் நேரத்தையும் சொந்தப் பணத்தையும் சொந்த தொழில் செய்து இழக்க விரும்பவில்லை.காரணம் ஊழிய விசுவாசம் அவர்களை தடுக்கிறது.

அப்படியே தன்னுடைய சொந்தப் பணத்தை முதலீடு செய்து ஒரு தொழிலை உருவாக்கினாலும் அதற்கு அவர்கள் வேலை செய்வதிலும் பார்க்க குறைந்த வருமானமே முதலில் கிடைக்கும் என்பதையே நம்பிக்கொண்டு எந்த ஒரு முயற்சியும் செய்து விடாமல் இருந்து விடுகின்றனர்.

இப்படியான சோம்பேறித்தனமான பேராசை கொண்ட மக்கள் தான் எல்லா இடங்களிலும் வேலைக்கு தள்ளப்பட்டு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்கும் மிகவும் பயந்தவர்கள் ஆகவும் பணத்தில் அதிகம் தேவை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

உங்களுடைய வாழ்க்கை பற்றிய பயம் உங்களை ஒரு வேலைக்கு தள்ளுகின்றது என்றால் உண்மையில் நீங்கள் பல வருடங்கள் ஓரிடத்தில் வேலை செய்வதால் கிடைக்கும் பணத்தை விட நீங்கள் சிந்தித்தால் சொந்தமாக சற்று முயற்சித்து கடினமாக உழைத்து அதில் அதைவிட பல மடங்கு வருமானத்தையும் மரியாதையையும் கௌரவத்தையும் உழைத்துக் கொள்ளலாம் என்பதை அவ்வளவு இலகுவாக புரிந்து கொள்ள மாட்டீர்கள்.

உள்நாட்டிலும் வேலை செய்தல் வெளிநாட்டிலும் வேலை செய்தல் என்கின்ற அடிப்படையில் வாழக் கூடியவர்கள் தான் எம் நாட்டில் அதிகமாக இருக்கின்றனர்.

ஒரு மனிதன் சொந்தத் தொழிலை அமைப்பது என்பது அவனுடைய பத்து பதினைந்து வருட வேலை வாழ்க்கையை விட்டு அதில் இருந்து பணத்தை சேமித்து தான் உருவாக்க முடியும் என்றால் எவராலும் சொந்த தொழில் செய்ய முடியாது.

உங்களிடம் கையில் உள்ளவற்றை வைத்துக்கொண்டு துவங்கும் எந்த ஒரு முயற்சியும் நாளடைவில் ஒரு மிகப்பெரிய உச்சத்தை அடைவதற்கு பாடுபட்டு அதனை வளர்க்க முடியும். அந்த நம்பிக்கை இருப்பவர் மட்டுமே சொந்தத் தொழிலை என்று முடிவு செய்து ஆரம்பித்து உருவாக்கலாம்.

மற்றவகையில் சொந்தத் தொழிலை ஆரம்பித்து செய்வதற்கு தயக்கம் காட்டிக் கொண்டே இருப்பவர்கள் வேலை ஒன்று தான் பாதுகாப்பு என இறுதியில் முடிவு செய்துகொண்டு மீண்டும் அந்த பொறிக்குள் சிக்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

உங்கள் உள்ளத்தில் நீங்கள் சம்பளத்தால் ஏமாற்றப்படுகிறோம் என்பது இளமையில் விளங்காது. அது முதுமையிலும் வறுமையிலும் புரியும் போது அதற்கு எதிராக உங்களால் ஒரு டீ கடை கூட போட முடியாமல் போய் விடும். எனவே இப்போதே விழித்து கொள்ளுங்கள். சொந்தக்காலில் எழுந்து நில்லுங்கள்.

நன்றி

அட்மின்

16.05.2022

No comments:

Post a Comment

Pages