சாதாரண ஒருவராக நீங்கள் இருப்பதன் மூலம் சாதனைகள் பல புரிந்து காட்டுங்கள் (SLBI யின் ஆக்கம்) - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Tuesday, May 17, 2022

சாதாரண ஒருவராக நீங்கள் இருப்பதன் மூலம் சாதனைகள் பல புரிந்து காட்டுங்கள் (SLBI யின் ஆக்கம்)


 சிலர் தான் வாழும் வாழ்க்கையை நொந்து கொண்டும் மனதுக்குள் வெந்து கொண்டும் ஏனோ தானோ என வாழ்க்கையை ஓட்டி கொண்டிருப்பார்கள்.

வாழ தெரியாத வாழ்க்கை மீதும் செய்யும் வேலையின் மீதும் ஒரு வித வெறுப்பும் அங்கலாய்ப்பும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

ஒரு சாதாரண மனிதனாக இருப்பதால் தான் எமக்கு இந்த நிலையும் குடும்ப வறுமையும் என அவர்களே கற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் தான் செய்யும் மோசமான காரியங்களால் தான் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இறைவனுடைய விடயத்தில் நன்றியுணர்வு மிக்கவர்கள் எப்போதும் வாழ்க்கையை திருப்தியுடன் வாழ தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

நீங்கள் சாதாரணமானவர்களாக இருந்தால் வாழ்க்கை விடயத்தில் மிகத் தூய்மையான உள்ளம் மிக்கவராக நன்றியுணர்வு மிக்கவராக இருப்பீர்கள். ஆனால் உங்களால் எதையும் முயற்சி செய்து சாதிக்க முடியும்.

தவறான எண்ணமும் மோசமான பழக்க வழக்கங்கள் இருந்தால் உங்களை சுற்றி நடக்கக்கூடிய எந்த விடயமாக இருந்தாலும் அது உங்களுக்கு எதிராகவே உருவாகி நிற்கும்.

புகைத்தல், குடிப்பழக்கம், பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருத்தல், மொபைல் போன்களை தவறான வழியில் பயன்படுத்துதல், கெட்ட நண்பர்களுடன் தொடர்பு வைத்திருத்தல், குடும்ப உறவுகளுடன் தவறாக நடந்து கொள்ளுதல் என பல விடயங்களில் ஈடுபடுவோர் மிக சாதாரணமான நிலையில் இருந்தாலும் இப்படியான மோசமான செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் அடையமாட்டார்கள்.

மிகப் பெரிய வசதி மிக்கவர்களாக இன்று உருவாகி இருக்கக்கூடிய பணக்காரர்கள் ஆரம்ப காலத்தில் மிக மோசமான வறுமை நிலையிலிருந்து உருவாகிய நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர்களே.

சில குடும்பங்களில் தந்தை மோசமானவராக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை இப்படி மோசமாக மாறி விடக்கூடாது என்பதில் ஒரு சிலர் மிகவும் அக்கறையாக நடந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கை பற்றி சிந்தித்து முடிவெடுத்தவர்களாக இருக்கிறார்கள்.

அப்படியானவர்களால் தான் தன்னுடைய எதிர்காலத்தை தானே முடிவு செய்துகொண்டு வெற்றியாளராக மாற்றும் காட்ட முடியும். அவர்கள் சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து தன்னுடைய சாம்ராஜ்யத்தை அடையாளப்படுத்தியவர்களாக இருப்பார்கள்.

அதற்கு தேவைப்படக் கூடிய காலம் 20 வருடங்களுக்கு அதிகமாகவே இருந்திருக்கலாம். அப்படியானவர்களை தான் என்று சமூகம் ஒரு வரலாறாக எடுத்துக்கட்டாக பேசுகிறது.

உங்களுடைய எளிமையான வாழ்க்கை சுமையாக இருக்காது. ஆனால் உங்களுடைய வறுமையை பொறுத்தவரையில் நீங்கள் அதை தகர்த்து எறிவதற்கு கடுமையான முயற்சி செய்து நீங்கள் வறுமையை  வெல்ல வேண்டும்.

சிலர் நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்கள் எந்தவித வழியும் இல்லாமல் அவர்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ முடியாமல் அதிர்ஷ்டத்தை நம்பி கொண்டும் நடப்பது நடக்கட்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பார்கள். பெரும்பாலானவர்களுக்கு தன்னுடைய கல்வி ஒன்றே வாழ்வை மாற்றும் என்று உறுதியுடன் இருப்பார்கள்.

அவ்வாறு இருப்பது எந்தத் தவறும் இல்லை. ஆனால் நாங்கள் சாதாரண நிலையிலிருந்து மிகப்பெரிய வெற்றியாளராக மாற வேண்டுமென்றால் ஒரு கட்டத்தில் உங்களுடைய திட்டத்தை முடிவு செய்து அதன் ஊடாகப் பயணித்து அதன் மூலம்தான் ஒட்டுமொத்த வாழ்வே மாற்றலாம்.

உங்களுடைய நடவடிக்கைகள் வெற்றியை நோக்கியே நல்ல பலன்களைத் தரக்கூடிய பெறுபேறுகளை உண்டாக்கக்கூடிய செயல்பாடுகளாக இருப்பின் உங்களால் குறுகிய காலத்தில் வெற்றியாளராக முடியும்.

உங்களுடைய நண்பர் வசதியானவர் ஆகவோ ஏழையாகவோ இருப்பதை நீங்கள் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால் நீங்கள் எவ்வாறு தனித்துவம் மிக்கவராக மாறப் போகிறீர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்து உங்களை நீங்களே மாற்றிக் காட்டுங்கள்.

உங்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விடுபட்டு உங்களுடைய உள்ளத்தை தூய்மையாக்கி உறுதியாக்கி உங்களால் எதையும் சாதிக்க கூடிய மனநிலையில் நீங்கள் வெற்றியாளர்களாக மாறுங்கள்.

நன்றி

அட்மின்

17.05.2022

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages