அட்டுலுகம சிறுமி படுகொலை - சேறு படிந்த சாரத்தினால் சிக்கிய சந்தேக நபர் - குற்ற புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை (VIDEO)

 


பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஆயிஷா 
மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர் என்பது தெரிய வந்துள்ளது.

அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கீரை தோட்டத்தை அண்டிய காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறுமியின் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதேவேளை, மரணம் தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் 5 காவல்துறை குழுக்கள் இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய, அப்பகுதியில் சி.சி.டி.வி கமராவின் காட்சிகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியிலுள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியின் மரணம் கொலை என்ற சந்தேககத்தின் பேரில், அந்த பகுதியில் மரக்கறி விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்த ஒருவரையும் பிறிதொரு நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments