ஐக்கிய இராச்சியம், ஸ்பெயின், போர்த்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேர், குரங்கு அம்மை தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்று உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அறிவித்துள்ளது.
மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல என்றபோதும் மெதுவாக இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளதால் இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்தாபனத்தின் 'உலக தொற்று அபாய தயார்நிலை' குழுவின் பணிப்பாளர் சில்வி பிரையன்ட் தெரிவித்துள்ளார்.
தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை தேவை எனவும் தடுப்பூசியும், முறையான சிகிச்சையுமே ஒரே தீர்வு என்று குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும் என்று குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இந்த குரங்கு அம்மை இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த குரங்கு அம்மை தொற்றின் காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் இரு பாலின சேர்க்கையாளர்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என பாதிக்கப்பட்ட நாடுகளின் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments