அரச நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் அண்மைய தரவுகளின் படி ஸ்ரீலங்கன் விமான சேவை வரியிருப்பாளர்கள் மீது பாரிய சுமையாக மாறியுள்ளது, கடந்த வருடம் மாத்திரம் 4550 கோடி ரூபாய் நட்டத்தில் பறந்திருக்கிறது.
இனி அதனை வேறு ஏதேனும் ஒரு சர்வதேச விமான சேவை
நிறுவனத்துடன் தனியார் மயப்படுத்தி இயக்கினாலும் இதுவரை ஏற்பட்ட
இழப்புக்களை நாட்டு மக்கள் சுமக்க வேண்டியுள்ளது.
எயார்பஸ்
விமானங்களை கொள்வனவு செய்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ அரசு சுமார் 100 கோடி
அமெரிக்க டாலர்களை அதிகமாக செலுத்தி இருந்தமை, கொள்வனவு செய்யப்பட்ட 8
விமானங்கள் உபயோகிக்கப்படாமை, கோரோனா கால விமான சேவைகள் வீழ்ச்சி,
முகாமைத்துவ முறைகேடுகள் என பல காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
மக்கள்
வங்கி இலங்கை வங்கி ஆகியவற்றிற்கு செலுத்தப்பட்ட வேண்டிய சுமார் 100 கோடி
அமெரிக்க டாலர்களை ஸ்ரீலங்கனால் செலுத்த முடியாதிருப்பதால் வங்கிகளும்
நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் நிலையில் உள்ளன.
அதேவேளை
உயரதிகாரி ஒருவர் மாதம் 30 இலட்சத்திற்கு மேல் ஊதியம் பெற்றதாகவும், 82
விமான ஓட்டுனர்களுக்கு 20 இலட்சத்திற்கு மேல் ஊதியம் வழங்கப்படுவதாகவும்,
மற்றும் 142 விமானஓட்டுனர்கள், 12 பொறியியலாளர்கள், பொறியியல் துறை
முகாமைத்துவ உறுப்பினர்கள் 9 பேர், முகாமைத்துவ உறுப்பினர்கள் மூவர் 10
இலட்சம் முதல் 20 இலட்சம் வரை மாத ஊதியம் பெறுவதாகவும் இது நட்டத்தில்
இயங்கும் விமான சேவைமீதான சுமையை அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்
பட்டுள்ளது.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
0 Comments