கல்பிட்டியில் Al-Aqsa வில் விஞ்ஞான பிரிவு ஆரம்பம். - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, June 11, 2022

கல்பிட்டியில் Al-Aqsa வில் விஞ்ஞான பிரிவு ஆரம்பம்.

 


கல்பிட்டியில் விஞ்ஞான பிரிவில் தூர பிரதேசங்களுக்கு சென்று கல்வி கற்கும் மாணவர்களின் சிரமங்கள் பாதுகாப்பு மேலும் பல காரணங்களை கருத்தில் கொண்டு இலங்கையில் பிரபலமான திறமையான ஆசிரியர்களை கொண்டு நீண்ட கால திட்டங்களில் அடிப்படையில் விஞ்ஞான பிரிவில் உயர்தரத்தில் கல்பிட்டி பிரதேசத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் வகையில் KSP (Kalpitiya Science Project) உறுப்பினர்களால் இறைவனின் உதவியை கொண்டு அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் ரோஸ் புகாரி மற்றும் ,பாடசாலை அபிவிருத்தி சங்கம் ,பழைய மாணவர் சங்கம்,பெற்றோர் ஆகியோரின் ஒத்திழைப்புடன் விஞ்ஞான பிரிவு (உயர்தரம் 2024 Batch) கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பான முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பை KSP உறுப்பினர்களுக்கும் மாணவர்களின் முயற்சிகள் வெற்றி பெறவும் உங்கள் பிரார்தனைகளையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Pages