சூரியகாந்தி ரிப்பன் (பட்டி) பற்றி உங்களுக்குத் தெரியுமா? - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Thursday, June 16, 2022

சூரியகாந்தி ரிப்பன் (பட்டி) பற்றி உங்களுக்குத் தெரியுமா?


ஒருவர் கழுத்தில் சூரியகாந்தி பூ சின்னம் கொண்ட (ரிப்பன்) பட்டி அணிந்திருந்தால் என்ன அர்த்தம் என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

சூரியகாந்தி ரிப்பன் அணிவது ஒன்றும் ஒரு புதிய போக்கு அல்லது ஃபேஷன் அல்ல. ஒரு நபர் அல்லது குழந்தைக்கு விசேட தேவைகள் இருப்பதைக் குறிக்க பொது இடங்களில் (ரயில் நிலையம், விமான நிலையம், முதலியன) பயன்படுத்தப்படும் சின்னமே அதுவாகும்.
உதாரணமாக, ஒரு சூப்பர் மார்க்கெட்டில் குழந்தையுடன் தாய் இந்த சின்னத்தை கொண்ட ரிப்பனை அல்லது பட்டியை அணிந்திருப்பதைப் பார்த்தால், குழந்தைக்கு உடல் அல்லது மன குறைபாடு / விசேட தேவைகள் உள்ளன என்று அர்த்தமாகும்.
இலங்கையில் இதுவரையில் இது பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவே உள்ளது.
மற்ற நாடுகளில், இப்படிப்பட்டவர்கள் இருக்கும்போது, ​​அவர்களை (கியூ) வரிசையில் முன்னேற வாய்ப்பளிப்பது, அவர்களுக்கு அதிக இடவசதிகளை.பெற்று கொடுப்பது போன்ற உதவிகளை மற்றவர்கள் வழங்க முன் வருகின்றனர்..

🌻

சிங்களத்தில் : உஷா பெரேரா
தமிழில்: நவாஸ்தீன்

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages