தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குள் மதுபானங்களின் விலை உயர்ந்து வருவதால் மதுபானங்களுக்கு மாற்றாக கஞ்சா கலந்த போதையை தூண்டும் பொருளை, இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூத்த கல்வியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனை பயன்படுத்துவது ஆபத்தான போக்காக மாறி வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.
‘மதன மோதக’ எனும் கஞ்சா கலந்த மலிவு போதைப்பொருளை உட்கொள்ளும் போக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக மனநல அறக்கட்டளையின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியருமான ஞானதாச பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பல மடங்கு அதிகரித்து வரும் மதுபானங்களின் விலையேற்றம் காரணமாக இளைஞர்கள், குறிப்பாக சிரேஸ்ட பாடசாலை மாணவர்கள், இந்த போதையை பயன்படுத்துவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளதாக பேராசிரியர் கூறியுள்ளார்.
எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இந்த மதன மோதக போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதையும், பரவுவதையும் முறைப்படுத்தி, சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பேராசிரியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments