வெள்ளை வான்களுக்கு பதிலாக மோட்டார் சைக்கிள் பயன்படுத்தி கொலைகள் - எதிர்க்கட்சித்தலைவர் சஜித்


கடந்த காலங்களில் வெள்ளை வான்களை பயன்படுத்தி செய்யப்பட்ட கொலைகள் தற்பொழுது மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றனாவா என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

திடீர் திடீரென மக்கள் கொலை செய்யப்படும் பயங்கரமான சம்பவங்கள் பதிவாகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதியில் இருக்கும் மக்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடாத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நடுப் பகலில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகவும் இதுவா ராஜபக்ச ஜனாதிபதி உறுதியளித்த தேசியப் பாதுகாப்பு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  இவ்வாறு உயிரிழந்த சிலர் முக்கியமான வழக்குகளின் அரசாங்க சாட்சியாளர்கள் என கேள்விபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களின் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் சாட்சியாளர்களே இவ்வாறு படுகொலை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதாக உறுதியளித்து ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் இன்று தேசியப் பாதுகாப்பினை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். 

Post a Comment

0 Comments