ரமழான் சுவனச்சோலை போட்டி நிகழ்ச்சியில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Monday, June 20, 2022

ரமழான் சுவனச்சோலை போட்டி நிகழ்ச்சியில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

 


புனித ரமழானைச் சிறப்பிக்கும் முகமாக ஆர் ஜே மீடியா கலை கலாசார ஊடக வலையமைப்பு மற்றும் சீகாஸ் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து இவ்வருடம் நடாத்திய ரமழான் சுவனச்சோலை போட்டி நிகழ்ச்சியில்  நாடளாவிய  ரீதியில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 

இப் போட்டி நிகழ்ச்சியில் முதல் 15 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த (18) சீகாஸ் உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்ததாக கொழும்பு  பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

இதன் போது முதல் 15   வெற்றியாளர்களுக்கு மிகப் பெறுமதியான சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.  

இந்நிகழ்வில்  சீகாஸ் உயர்கல்வி நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி செயினுலாப்தீன் நஜ்முத்தீன் அவர்களும் ஆர் ஜே மீடியா கலை கலாசார ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் அறிவிப்பாளர் ஏ.எம். இன்ஷாப் , சீகாஸ் உயர்கல்வி நிறுவனத்தின் பதிவாளர் நாயகமும் செயலாளருமான நூருல் நப்கா இல்யாஸ் மற்றும் சீகாஸ் உயர்கல்வி நிறுவனத்தின் கல்விக்கான பணிப்பாளர்  கலாநிதி ஷீனாஸ் துறே, அகில இலங்கை கல்விக்கான இணைப்பாளரும் உதவிப் பதிவாளருமான மௌலவி ஆசிரியர் அல்ஹாஜ் அப்துல் முனாப் மற்றும் பல்வேறுபட்ட கல்விமான்கள் புத்தி ஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

-Ilham-
No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages