உசாரய்யா உசாரு, ஓடுர வண்டியில உசாரு!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் அதிகரித்துள்ளதால், சன நெரிசலுடன் பயணிக்கும் பஸ் வண்டிகள், புகையிரதங்களில் தமது கைவரிசையை காட்டும் பிக்பாக்கட் திருடர்கள் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
வண்டிகளில் ஏறும் இறங்கும் படிகளில் சிலர் நன்கு பயிற்றுவிக்கப் பட்டவர்கள் போல் பயணிப்பதாக ஒருவர் என்னிடம் கூறினார்.
உங்கள் பர்ஸ் மற்றும் அவற்றில் உள்ள காசு மட்டுமல்லாது முக்கிய ஆவணங்கள், தேசிய அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதிப் பத்திரம், வங்கி அட்டைகள் என்பவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பிரத்தியேக ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.
அதே போன்றே மொபைல் போன்கள், பெண்கள் எடுத்துச் செல்லும் கைப்பைகள் குறித்தும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.
அவற்றை பலர் பறிகொடுத்து விட்டு செல்லுகின்ற கதைகள் பகிருகின்ற தகவல்களை பார்த்து விட்டு உதவ முடியாத நிலையில், இந்த வருமுன் காக்கும் அறிவுறுத்தலை நினைவூட்ட விரும்புகிறேன்!
0 Comments