பாடசாலைகள் மீள ஆரம்பம்! கல்வி அமைச்சின் விசேட இறுதி அறிக்கை வெளியானது - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, June 25, 2022

பாடசாலைகள் மீள ஆரம்பம்! கல்வி அமைச்சின் விசேட இறுதி அறிக்கை வெளியானது

 


எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த வாரம் மூடப்பட்ட பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் இனி வாரத்திற்கு 3 நாட்கள் மாத்திரமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் இவ்வாறு பாடசாலைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  காலை 07.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஏனைய பாடசாலைகள்  கடந்த வாரத்தில் செயற்பட்டமை போன்று செயற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் அந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை இல்லாத நாட்களில் இணைய  முறை மற்றும் வீட்டுச் செயல்பாடுகள் மூலம் தொடர்புடைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Pages