பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடை அல்லது பொருட்களை வாங்கினால் ஐந்து கிலோ அரிசி Free


இலங்கையின் பிரபல ஆடை நிறுவனங்கள் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கமைய, பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடை அல்லது பொருட்களை வாங்கினால் ஐந்து கிலோ அரிசியை வழங்குவதற்கு நாட்டின் பிரபல ஆடை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், 5,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள ஆடை அல்லது பொருட்களை வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் கொள்வனவு செய்யும் வகையில் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகளும் ஆரமபிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 10,000 ரூபாய்க்கு ஆடை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, பைகள், குடை, உணவுப் பாத்திரங்கள் உட்பட பரிசுப்பொருட்களை முன்பெல்லாம், இந்த ஆடை நிறுவனங்கள், வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் தற்போதைய நிலையில் இந்த செய்தி போலியாக வலம் வருகிறது என்றும் சமூக வலைத்தள பாவைனையாளர்கள் கூறி வருகின்றர்.



Post a Comment

0 Comments