பலரும் கேட்கின்ற ஒரு கேள்வி…! Galle Face அரகல Hijacked செய்யப்பட்டதா? என்ன நடந்தது (விபரம் உள்ளே) - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Thursday, June 16, 2022

பலரும் கேட்கின்ற ஒரு கேள்வி…! Galle Face அரகல Hijacked செய்யப்பட்டதா? என்ன நடந்தது (விபரம் உள்ளே)

 


கோத்தா கோ கம, அல்லது அரகலய இப்பொழுது இல்லையா ? கூட்டமே இல்லையே, என்ன நடந்தது ? அரகலய முடிந்து விட்டதா…?


கடந்த மே மாதம் 9ம் திகதி ஏற்படுத்தப்பட்ட கலவரத்தின் பின், கோதா கோ கம யின் முழு கட்டுப்பாடும் JVPயிடம் சென்று விட்டது.

பொதுவான ஒரு இடத்தில் தனி நபர் அரசியலோ, அல்லது தனி நபர்களுக்கான நிகழ்ச்சி நிரலோ கொண்டு செல்ல கூடாது. அரகலய விற்கு ஆதரவாக சகல கட்சிகளையும் சேர்ந்த சகல இன மக்களும் இருந்தார்கள். சில நிகழ்வுகளின் பின்னர் அவை அரசியல் மயப்படுத்தப்பட்டன, அதனை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மே மாதம் 9ம் திகதி எதிர்கட்சி தலைவர் தாக்கப்பட்ட பின், பாராளுமனரற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தாக்காப்படாமல், வருகையை எதிர்பார்த்திருந்தது போல அழைத்து சென்றதிலும் அரசியல் இருக்கிறது. அதற்கு பிறகு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் அனைவருமாக அரகலயை விட்டு வெளியேறி விட்டார்கள் என்பதே உண்மை.

பொதுமக்களின் உதவிகளை போலவே, எதிர்கட்சியும் பல வழிகளில் உதவிகளை செய்தது. எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியார்கள் பலர் அங்கிருந்தார்கள். குறை நிறைகளை கேட்டறிந்து செயற்பட்டார்கள். அவர்கள் கட்சியை முன் நிறுத்தி எதையும் செய்யவில்லை.
இப்பொழுது அங்கே…

Trade union organizer - JVP ன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் - Wasantha Samarasingha

Eranga - JVP Youths organizer
IUSF Frontline Socialist Party

என இப்படி பலரும் JVP பின்புலத்தில் உள்ளவர்களே இருக்கிறார்கள். தெளிவாக சொல்வதென்றால் மக்கள் போராட்டத்தை JVP கட்சியினர் Hijacked செய்து விட்டனர்.

இள துடிப்புள்ள இரத்தம், JVP யை ஆதரித்தாலும், பெரும்பாலான மக்கள் பலர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. விரும்பாவிட்டாலும் அதுதான் உண்மை.!

மக்கள் போராட்டத்தை அரசியல் போராட்டமாக கொண்டு செல்லப்பட்டதை, மீண்டும் மக்கள் போராட்டமாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும். எல்லோருக்கும் ஒரு அரசியல் பின்புலம் உண்டு. பொதுவான ஒரு இடத்தில் அதனை வெளிக்காட்டாமல் அரச எதிர்ப்பு போராட்டமாக இருந்தால் மட்டுமே கடைசி வெற்றியை பெறலாம்.!

அரசியல் கட்சி போராட்டமாக இது தொடர்ந்தால் நாங்களும் வெறும் பார்வையாளர்கள் தான்.

குறிப்பு :- இங்கே பலரும்,JVP தீவிர ஆதரவாளர்கள் தான். நீங்கள் விரும்பாவிட்டாலும் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். !

🙂
அரகலயட ஜயவேவா !

-AZEEM JAHUFER-

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages