4 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட ஒரு காணியை (Kalpitiya Hardball Cricket Ground) மைதானமாக பெற்றுக்கொடுத்துள்ள கற்பிட்டி இளைஞர்கள் - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Tuesday, July 26, 2022

4 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட ஒரு காணியை (Kalpitiya Hardball Cricket Ground) மைதானமாக பெற்றுக்கொடுத்துள்ள கற்பிட்டி இளைஞர்கள்

 

file pic
file picture

தனி மனிதர்களால் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவே முடியாது என்ற மனோநிலை நம் சமூகத்தில் ஆழமாக வளர்ந்திருக்கும் ஒரு உண்மையாகும்.


இந்த சிந்தனையை பொய்பிக்கும் வகையில் எமதூர் கல்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஹஸ்லான் அப்துல் ரஸ்ஸாக் Mohamed Haslan அவர்களாலும் சக தோழர்களின் முயற்சிகளாலும் 4 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட ஒரு காட்டுக்காணி, பல கஷ்டத்திற்கும், சதிகளுக்கும் மத்தியில்  சட்டப்படி போராடி 5ற்கும் மேற்பட்ட கிரிக்கட் கடினப்பந்து விளையாட்டுக்கழகங்கள் பயிற்சி பெரும் (Kalpitiya Hardball Cricket Ground) மைதானமாக மாற்றியமைக்க பெற்றுக் கொண்டனர்.

அரசை ஏமாற்றி, அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து, லஞ்சம் கொடுத்து அரச காணிகளை அபகரிக்கும் ஊழல் நிறைந்த கயவர்களுக்கு மத்தியில், சமூகத்திற்காக இப்படியான ஒரு நற்செயலை அல் ஹமாஸா விளையாட்டுக்கழகத்தின் ஆரம்ப ஊக்குவிப்போடு செய்த Clean Nation தூய தேசத்திற்கான கல்பிட்டி பிரதேச தலைவர்களில் ஒருவரான சகோதரர் ஹஸ்லான் அப்துல் ரஸ்ஸாக்கும் சக முயற்சியாளர்களும் பாராட்டிடப்பட வேண்டியவகளே.

அந்த வகையில் தங்களது முயற்சியால் உருவான அந்த பொது மைதானத்தில் விளையாடும் அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்காக தூய தேசத்திற்கான அரசியல் இயக்கம் மூலமாக சில உதவிகளை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages