தப்பியோடுபவர்களின் புகலிடமா துபாய்? - KALPITIYA VOICE - THE TRUTH

Friday, July 22, 2022

தப்பியோடுபவர்களின் புகலிடமா துபாய்?

 


ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச கடந்த வாரம் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நெருக்­க­டியை எதிர்­கொண்டு நாட்டை விட்டு வெளி­யேற முயற்­சித்­த­போது, அவர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை (யுஏஇ) தேர்ந்­தெ­டுத்­த­தாக தக­வல்கள் வெளி­யா­கின. தற்­போது அவர் சிங்­கப்­பூரில் தங்­கி­யி­ருக்­கின்ற போதிலும் விரைவில் அவர் ஐ.அ.எமி­ரேட்ஸை சென்­ற­டைவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இது ஆளும் ராஜ­பக்ச குடும்­பத்தின் ‘பார­சீக வளை­குடா நிதி மையத்­துடன்’ (Persian Gulf financial hub)உள்ள உற­வு­களை அடிக்­கோ­டிட்டுக் காட்­டு­கி­றது.

சர்­வ­தேச புல­னாய்வு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கூட்­ட­மைப்பு (ICIJ)தலை­மை­யி­லான கடல்­க­டந்த நிதி தொடர்­பான உல­க­ளா­விய புல­னாய்வுத் திட்­ட­மான பண்­டோரா பேப்­பர்ஸில் ராஜ­பக்ச குடும்ப உறுப்­பி­னர்கள் சிலரின் மறைத்து வைக்­கப்­பட்­டுள்ள சொத்­துக்கள் கடந்த வருடம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. ஆளும் குடும்­பத்தின் வாரி­சான நிரு­பமா ராஜ­பக்­சவும், அவ­ரது கணவர் தொழி­ல­திபர் திருக்­குமார் நடே­சனும், இர­க­சிய ஷெல் நிறு­வ­னங்கள் (அலு­வ­ல­கங்­களோ ஊழி­யர்­களோ இல்­லாத, வெறும் பெயரில் மாத்­திரம் இயங்கும் நிறு­வ­னங்கள், ஆனால் அவற்­றுக்கு பாரிய சொத்­துக்கள் இருக்க முடியும்) மற்றும் அறக்­கட்­ட­ளை­களை பயன்­ப­டுத்தி, 18 மில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய சொத்­துக்­களை லண்டன் மற்றும் சிட்­னியில் வைத்­தி­ருந்­ததை ஆவ­ணங்கள் வெளிப்­ப­டுத்­தின.

14 வெளி­நாட்டு சேவை வழங்­கு­நர்­க­ளி­ட­மி­ருந்து கசிந்த பண்­டோரா பேப்பர்ஸ் ஆவ­ணங்கள், இந்த ராஜ­பக்ச குடும்­பத்தின் தம்­ப­தி­ய­ருக்கு ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸிலும் ரக­சிய சொத்­துக்கள் இருப்­பதைக் காட்­டு­கின்­றன.

ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் குடி­யு­ரிமை அடை­யாள அட்டை மற்றும் 2019 ஆம் ஆண்டு நில­வ­ரப்­படி, நடேசன் மற்றும் தம்­ப­தி­யரின் இரண்டு பிள்­ளைகள் துபாயில் வசிப்­ப­வர்கள் என்­பதைக் காட்டும் பிற பதிவு ஆவ­ணங்­களும் இந்த புல­னாய்வுத் திட்­டத்தில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. அவர்­க­ளுக்கு வானு­ய­ர­மான சொகுசு அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பில் சொத்­துக்கள் உள்­ள­தாக இந்த ஆவ­ணங்கள் காண்­பிக்­கின்­றன. எனினும் ராஜ­பக்ச குடும்­பத்­திற்கு சொந்­த­மான சொத்­துக்கள் அதில் இருக்­கி­றதா என்­பது தெரி­ய­வ­ர­வில்லை.

2016 ஆம் ஆண்டு துபாயை தள­மாகக் கொண்ட பிர­பல வியா­பா­ரியின் முகா­மை­யா­ள­ராக ஆவ­ணங்­களில் அடை­யாளம் காணப்­பட்ட நடேசன், தனது ஷெல் நிறு­வ­னங்­களில் ஒன்றின் வங்கிக் கணக்கைத் திறப்­ப­தற்­கான விண்­ணப்­பத்தில் மற்­றொரு துபாய் முக­வ­ரியை தனது வசிப்­பி­ட­மாக குறிப்­பிட்­டுள்ளார்.

கடந்த ஒக்­டோ­பரில் நிரு­பமா மற்றும் நடேசன் தம்­ப­தி­யி­னரின் கடல்­க­டந்த சொத்­துக்கள் பற்றி பண்­டோரா ஆவ­ணங்கள் தகவல் வெளி­யிட்­டதைத் தொடர்ந்து, ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தனது அர­சாங்கம் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்­க­வுள்­ள­தாக குறிப்­பிட்டார். அத்­துடன் இலஞ்சம் அல்­லது ஊழல் குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்கும் ஆணைக்­குழு (CIABOC) விசா­ர­ணையைத் தொடங்­கி­யது. ஆனால், நடேசன் மற்றும் நிரு­பமா ராஜ­பக்­சவின் கணக்­குகள் குறித்த தக­வல்­களை வழங்­கு­வதில் வங்­கிகள் தாமதம் காட்­டி­ய­தாக ஊட­கங்கள் தெரி­வித்­தன.

இதற்­கி­டையில், நிரு­பமா ஒரு முறை­யா­வது துபாய்க்கு பயணம் செய்­துள்ளார் என்றும் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. கசிந்­துள்ள ஆவ­ணங்­க­ளின்­படி எமி­ரேட்டில் வசிக்கும் அவர்­களின் மகன், தனது இன்ஸ்­டா­கி­ராமில் வெளி­யிட்ட செல்ஃ­பி­களில் அவர்கள் வளை­கு­டாவில் வாழும் ஆடம்­ப­ர­மான வாழ்க்கை முறையைக் கண்­டு­கொள்ள முடி­கி­றது.

நாடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­ய­வர்கள் தஞ்­சம்­புகும் இடமா துபாய்?
சமீ­பத்­திய ஆண்­டு­களில், ஐக்­கிய அரபு எமிரேட்ஸ், அர­சியல் பின்­புலம் கொண்ட பெரும் பண முத­லைகள் மற்றும் குற்­ற­வா­ளிகள் தங்கள் செல்­வத்தை பாது­காப்­பாக மறைத்து வைப்­ப­தற்­கான புக­லி­ட­மாக மாறி­யுள்­ளது. ஏனைய பல நாடுகள் தமது கடல் எல்­லை­களில் கடும் கட்­டுப்­பா­டு­களை அறி­மு­கப்­ப­டுத்­திய போதிலும் எமிரேட்ஸ் நெகிழ்­வுத்­தன்­மை­மிக்க நடை­மு­றை­களைப் பின்­பற்­று­கின்­றமை கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

துபா­யி­லுள்ள 27 வீத­மான சொத்­துக்கள் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்குச் சொந்­த­மா­னவை என்றும் இவர்­களில் கணி­ச­மானோர் சர்­வா­தி­கார ஆட்சி நடை­பெ­று­கின்ற அல்­லது போர் போன்ற முரண்­பா­டுகள் நில­வு­கின்ற நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் என்றும் ஐரோப்­பிய ஒன்­றிய வரிக் கண்­கா­ணிப்பு நிறு­வ­னத்தின் ஆய்வில் தெரிய வந்­துள்­ளது. 2020 ஆம் ஆண்டு கணக்­கெ­டுப்­பின்­படி, 408 இலங்கைப் பிர­ஜை­க­ளுக்குச் சொந்­த­மான 590 சொத்­துக்கள் துபாயில் இருப்­ப­தாவும் இவற்றின் பெறு­மதி 205 மில்­லியன் டொலர்கள் என்றும் மேற்­படி நிறு­வ­னத்தின் தர­வுகள் கூறு­கின்­றன.

மார்ச் மாதத்தில், உலகின் முக்­கிய பண­மோ­சடி தடுப்பு கண்­கா­ணிப்பு குழு ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை அதிக கண்­கா­ணிப்பு தேவைப்­படும் நாடு­களின் ‘சாம்பல் பட்­டி­யலில்” சேர்த்­தது. பாரிஸை தள­மாகக் கொண்ட நிதி நட­வ­டிக்கை பணிக்­குழு (FATF) எமிரேட்ஸ், ஆபத்­து­மிக்க பண­மோ­சடி அச்­சு­றுத்­தல்­களை முறி­ய­டிப்­ப­தற்­கான விசா­ர­ணைகள் மற்றும் சட்­டங்­களை துரி­தப்­ப­டுத்த வேண்டும் என்றும் கோரி­யுள்­ளது.

ராஜ­பக்ச குடும்ப உறுப்­பி­னர்கள் மற்றும் நண்­பர்கள் துபாய் வங்கிக் கணக்­கு­களில் நூற்­றுக்­க­ணக்­கான மில்­லியன் டொலர்­களை பதுக்கி வைத்­தி­ருப்­ப­தாக எதிர்க்­கட்­சிகள் தொடர்ச்­சி­யாக குற்­றம்­சு­மத்தி வரு­கின்­றன. எனினும் ராஜ­ப­க்ஷாக்கள் அவற்றை மறுத்து வரு­கின்­றனர்.

தலி­பான்கள் காபூலைக் கைப்­பற்­றி­யதைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி, துபாயிலேயே தஞ்சம் புகுந்தார். அதேபோன்று தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்களான தக்ஷின் சினவத்ரா, யிங்லுக் சினவத்ரா, பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப், ஸ்பெய்னின் முன்னாள் மன்னர் ஜுஆன் கார்லோஸ், கொல்லப்பட்ட முன்னாள் யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலிஹின் மகன் அஹ்மத் சாலிஹ் என பலர் இவ்வாறு தமது நாடுகளை விட்டும் தப்பியோடி துபாயில் தஞ்சம் புகுந்தவர்களாவர். இவர்களது பட்டியலிலேயே இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோத்தபாய ராஜபக்சவும் இணைந்து கொள்ளப் போகிறார்.-Vidivelli

No comments:

Post a Comment

Pages