பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, July 24, 2022

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

 


அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இதுதொடர்பாக கல்வி அமைச்சு 19.07.2022 அன்று வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், வலய பொறுப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும்.

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இதுபற்றிய ஆலோசனை கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.  

No comments:

Post a Comment

Pages