கோட்டாபயவுக்கு இறுகும் பிடி! உடனடியாக கைது செய்க - சிங்கப்பூரிடம் அவசர வேண்டுகோள் - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, July 24, 2022

கோட்டாபயவுக்கு இறுகும் பிடி! உடனடியாக கைது செய்க - சிங்கப்பூரிடம் அவசர வேண்டுகோள்

 


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டங்களின் சட்டத்தரணிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோட்டாபய மீதுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டங்களின் சட்டத்தரணிகள் சங்கம் 63 பக்கங்களைக் கொண்ட அறிக்கையினை சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

குறித்த அறிக்கையில், கொலை, சித்திரவதை, பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சுதந்திரத்தை பறித்தல் மற்றும் உள மற்றும் உடலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் கோட்டாபய ஈடுபட்டார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது ஜெனிவா மற்றும் சர்வதேச மனிதவுரிமை சட்டங்களை கோட்டாபய கடுமையாக மீறியதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages