மீண்டும் முகக்கவசம் அணிவது தொடர்பாக வெளியான தகவல் - KALPITIYA VOICE - THE TRUTH

Tuesday, July 26, 2022

மீண்டும் முகக்கவசம் அணிவது தொடர்பாக வெளியான தகவல்

 


தற்போதைய கொவிட்-19 வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது கடுமையாக பரிந்துரைக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தனவின் ஆலோசனையின் பேரில், பொதுமக்கள் வீட்டு வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது முகக்கவசங்களை அணியுமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டமாக அமுல்படுத்தப்படாவிட்டாலும் அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்குப் பிறகு, இலங்கையில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment

Pages